அம்மா - இயற்கை எமக்களித்த கற்பகதரு
காதல் - அன்பு என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் விற்கும் தன்னியல்பான நாகரீக வியாபாரம்
கடிகாரம் - காலம் என்னைத் துரத்துகிறது. நீயும் காலத்தைத் துரத்துகிறாய். யாரை யார் பிடிப்பது என்பது தான் இவ்வட்டத்துக்குள் போட்டி
கவிதை – துயரத்தின் வெளிப்பாட்டை சொற்கள் கொண்டாடும் சுதந்திரம்.
தோல்வி – விழுந்த தழும்புகளை மறைக்கும் புதிய நாகரீகச் சொல்
பெண் - சிற்பியான இறைவன் படைத்து வியந்து பார்க்கும் சிலை
நம்பிக்கை – நாளைய உலகை உனதாக்கும் புதிய ஒரு ஆயுதம்.
சிந்தனை – உனக்குள்ளேயே மீண்டும் உன்னை உருவாக்கும் ஆற்றலைக் கொடுப்பது.
விருட்சம் - ஊர் வெயிலை தன் தலையில் தாங்க இயற்கை தந்த பெரிய குடை
உழைப்பு – உன் வியர்வையை எடை போடும் ஒவ்வொரு சதமும் திருமணம் - கழுத்தில் தாலி என்றால் மீதி என்ன? காலில் சுற்றி வேலி தான்
குழந்தை – புன்னைகையில் கதை பேசத் தெரிந்த ஒரு மலர்ப் பருவம்
புன்னகை – ஒவ்வொரு மனங்களும் திறந்து பேசும் தேசிய மௌன மொழி
கஞ்சன் - வாழ்வதற்காக என்று சொல்லிக் கொண்டு தினமும் மரணப்படுக்கைக்குள் செல்பவன்
சிகரெட் - நீ பிடித்தால் அது புகையும் அது உன்னைப் பிடித்தால் நீயே புகைவாய்
சரித்திரம் - இறந்த காலத்தின் நாளைய உயிர் உள்ளது என்பது
கடல் - எவ்வளவு தான் கைதட்டி ஆர்ப்பரித்தாலும் மேடை ஏற முடியாத தவழ மட்டுமே முடிந்த குழந்தைகள்
வேலைக்காரி – நான் ரொம்ப பிசி என்று உலகத்திற்கு காட்டும் பெண்ணின் அடைக்கல அங்கீகாரம்
தொலைபேசி – துச்சமென வெல்கின்றன தூரங்களை
நூலகம் - பல அறிஞர்கள் தன்னுள்ளே கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு வித அலை
நண்பன் - இருந்தால் நிழல் பிரிந்தால் உயிர்
அரசியல்வாதி – தேர்தலின் முன் அவன் உங்கள் கைகளைப் பிடிப்பான் பின் நீங்கள் அவன் கையைக் கூடப்பிடிக்க முடியாது
ஓவியம் - வர்ணங்கள் கதை பேசும் ஒரு விதக் கலை
சுயநலவாதி – விண் மீனுக்காகவேனும் வலை வீசத் தயாராக உள்ளவன்
அரங்கு – பேசாதவனையும் பேசவைக்கும் புது உலகம்
பள்ளி – துள்ளித் திரிபவனுக்கு புள்ளி கொடுத் வெள்ளித் திசை காட்டுவது.
இவை எனது கணிப்பில். ஆனாலும் மாறக் கூடியது.