“புதியதைத் தேடுங்கள் காலத்துக்கேற்றவாறு மாறுங்கள்” என்று அழுத்திக் கூறினார் சுவீடன் நாட்டு பிரபல ஊடகவியலாளர் கிளாஸ் தோ(class thor) அவருடன் சில நிமிடங்கள்.

CLASS THOR

CLASS THOR


கேள்வி:- எதற்காக ஊடகவியல் துறையைத் தெரிவு செய்தீர்கள்?
பதில் :- சின்ன வயதிலிருந்தே எனக்கு ஆர்வம் இருந்தது. எவ்வாறென்றால் பாடசாலைக்காலங்களில் பாடசாலை முடிந்தபின்பு நகர்ப்புறங்களை சுற்றிப்பார்ப்பேன். அங்கு என்ன நடக்கின்றது என்பதை அவதானிப்பேன். நாளுக்கு நாள் வேறுபட்ட
முகங்களைச் சந்திப்பேன். இதுவே எனக்கு அத்திவாரமாக அமைந்தது.

கேள்வி :- தற்போது இலங்கையில் ஊடகவியலின் நிலமை எவ்வாறு காணப்படுகின்றது?
பதில் :- என்னுடைய அவதானிப்பில் இருந்த இளம் ஊடகவியலாளர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களை மேலும் முன்னேற்றுவதற்காக நன்கு பயிற்சிகள் வழங்க வேண்டும். கூடுதலாக பெண்கள் இந்தத் துறையில் ஈடுபடுகின்றார்கள். சில முகங்களைப் பத்திரிகையில் காணக்கூடியதாக உள்ளது.

கேள்வி :-
இன்றைய காலகட்டத்தில் சுவீடனில் பத்திரிகைகளின் நிலை எவ்வாறு காணப்படுகின்றது?
பதில் :- பத்திரிகைகளுக்கு சரியான போட்டியாகவே காணப்படுகின்றது. ஏனென்றால் இணையம் நன்றாக வளர்ச்சி அடைந்து வாசகர்களை அதன் பக்கம் அதிகமாக ஈர்த்துக்கொண்டிருக்கின்றது.இருந்தாலும் இது வித்தியாசமான போட்டியாகவே காணப்படுகின்றது.

கேள்வி :- சுவீடனில் எத்தனை பத்திரிகைகள் வெளிவருகின்றன?
பதில் :- 150 வகையான பத்திரிகைகள். டெய்லி நியூஸ் பத்திரிகை மற்றும் நஷனல் பத்திரிகைகள் விற்பனையில் அதிக முன்னணியில் உள்ளது. டெய்லி நியூஸ் பத்திரிகை ஒரு நாளைக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின்றன. மொத்தமாக 9 மில்லியன் மக்கள் சுவீடனில் வாழ்கின்றனர்.

கேள்வி :- உங்களுடைய நாட்டில் இவ்வாறான போட்டிகளுக்கு ஊடகவியலாளர்கள் எவ்வாறு முகம் கொடுக்கின்றார்கள்?
பதில் :- நாளுக்கு நாள் தங்களை மாற்றிக் கொண்டு புதிய எண்ணங்கள் சிந்தனைகளை முன்வைப்பதுடன் தினமும் அதிக மக்களுடன் பேசுகின்றார்கள்.

கேள்வி : – உங்களுடைய அனுபவத்தில் இலங்கை பத்திரிகைகள் எவ்வாறு காணப்படுகின்றது.
பதில் :- பத்திரிகைகள் மாற்றம் காணப்பட வேண்டும்.அதாவது பத்திரிகைகள் சாதரண மக்கள் வாழ்க்கையை அணுகவேண்டியுள்ளது.அதிகமாகவே ஆண்களினதும் அரசியல்வாதிகளினதும் படமும் செய்தியுமாகவே காணப்படுகிறது. வேறுபட்ட முறையில் நேர்முகம் காணல் செய்யப்பட வேண்டும். மக்கள் குரல்களையும் முகங்களையும் வெளிப்படுத்த வேண்டும். ஆலோசனை கூற வேண்டும்.

கேள்வி :- வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன?
பதில் :- முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று பல்வேறு விதமான மக்களை சந்திக்க வேண்டும். வேறுபட்ட சூழலில் செயற்படுவதுடன் ஒவ்வொருநாளும் புதிய விடயங்களை கற்க வேண்டும். எது நல்லது கெட்டது என ஊடகவியலாளனுக்கு இல்லை. உண்மையறிய புலனாய்வு செய்ய வேண்டும்.