உலகைப் பயமுறுத்திய சர்வாதிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. 1922முதல் 21ஆண்டு காலம் இத்தாலியின் பயங்கரமான சர்வாதிகாரியாக விளங்கிய இவர் ஹிட்லரின் நண்பர். ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்னர் முசோலினி புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடந்த முறை சாதாரணமானதல்ல. சிம்ம சொப்பனமாக இருந்த சர்வாதிகாரியையும் அவருடைய காதலியையும் சுட்டுக் கொன்று அவர்களது உடல்களை கம்பங்களில் தலை கீழாகத் தொங்கவிட்டனர். இத்தாலியில்இஇரும்புப் பட்டறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883 ம் ஆண்டு ஐ_லை 29ம் திகதி முசோலினி பிறந்தார். தாயார் ஆசிரியர். அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்து வந்தது. முசோலினியின் தந்தை “மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி மலர வேண்டும்”என்ற கருத்துடையவர். தன் இரும்புப் பட்டறைக்கு வருபவர்களிடம் அரசியல் பேசுவார். அதனால் முசோலினிக்கும் இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது.பள்ளிப் படிப்பை முடித்ததும் சில காலம் ஆசிரியராகப் பணி புரிந்தார். லத்தீன்இ பிரெஞ்ச்இ Nஐர்மன்இ ஸ்பானி;ஷ்இ ஆங்கிலம் முதலிய மொழிகளையும் கற்றார். பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கவர்.



ஆசிரியர் தொழிலை விட்டு பின்னர் இராணுவத்தில் பணியாற்றினார். பிறகு கம்ய+னிஸ்ட் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரானார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின. ஒரு கட்டுரைக்காக அவருக்கு ஓராண்டு சிறைத்; தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையான மறுநாளே “அவந்தி” என்ற புரட்சிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
உலகப் போர்
இந்த நிலையில் 1914ம் ஆண்டு முதலாம் உலகப் போர் மூண்டது. முசோலினி இராணுவத்தில் சேர்ந்தார். இதே ஆண்டில் தான் Nஐர்மனியில் ஹிட்லரும் இராணுவத்தில் சேர்ந்தார். போரில் படுகாயமடைந்த முசோலினி ஊருக்குத் திரும்பினார். 1919ல் உலகப் போர் முடிந்தது.போரில் இத்தாலியில் மட்டும் 6லட்சத்து 50ஆயிரம் பேர் இறந்தார்கள். மேலும் 10லட்சம் பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்து எங்கும் பசியும் பட்டினியுமாகவே காணப்பட்டது. நாட்டில் கலகங்கள் மூண்டன. இந்த சூழ்நிலையில் 1920ல் “பாசிஸ்ட்” கட்சியை முசோலினி தொடங்கினார். 1921ல் நடந்த தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியைப் பிடிக்கமுடியாவிட்டாலும் 30 இடங்களைக் கைப்பற்றியது. முசோலினி அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஏதிர்க்கட்சித் தலைவரான முசோலினி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீரவேகச் சொற்பொழிவுகள் ஆளும் கட்சியினருக்கு அச்சமூட்டின. பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த விடமால் கலாட்டா செய்து கொண்டிருந்தார். 1922 ஒக்டோபரில் முசோலியின் கருஞ்சட்டைப்படை இத்தாலியின் தலை நகரத்தைப் பிடிக்கத் திரண்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் அமைச்சரவையை ராஐpனாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டார். மந்திரிசபை விலகியதும் ஆட்சிப் பொறுப்பை முசோலியிடம் ஒப்படைத்தார்.


ஆட்சிக்கு வந்த முசோலினி “இத்தாலியின் முன்னேற்றத்திற்காக நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்து விடுவேன்” என்று அறிவித்தார். எதிர்க்கட்சிகளை தடை செய்தார்.பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கினார் .தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அது மட்டுமல்லாமல் தன் எதிரிகளைச் சிரச் சேதம் செய்யும் படி உத்தரவிட்டார்.மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு மேல்! இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி மக்களைக் கவர்வதற்கு பல திட்டங்களை முன்வைத்தார். விவசாயிகளுக்கு இயந்திரக் கலப்பைகள் வழங்கினார். அதனால் உணவு உற்பத்தி பெருகியது.வேலை இல்லாத்திண்டாட்டத்தை ஒழித்தார். வரிகளைக் குறைத்தார். மருத்துவ வசதிகளைப் பெருக்கினார். இதனால் முசோலியை மக்கள் ஆதரித்தனர். நிலைமை தனக்கு சாதகமாக இருந்ததால் பொதுத் தேர்தலை நடத்தினார். அதில் அவர் கட்சி அமோக வெற்றியீட்டியது. அதன் பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். 1922ம் ஆண்டு முதல் இத்தாலியின் மாபெரும் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினார். 1933ல் Nஐர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர் முசோலினியின் நண்பர். 1934ல் வெனீஸ் நகருக்குச் சென்று முசோலியைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து இத்தாலி இராணுவத்தைப் பலப்படுத்தவும் ஆயுதத் தொழிற்சாலை அமைக்கவும் ஹிட்லர் உதவினார்.


இந்த நிலையில் அரசாங்க விருந்து ஒன்றில் கிளாரா என்ற அழகியை முசோலினி சந்தித்தார். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்தார். ஏற்கனவே திருமணம் ஆன முசோலினி கிளாராவை எப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார். கிளாரா விமானப்படை அதிகாரி ஒருவரை மணந்து விவாகரத்துப் பெற்றவள். தனது வசீகரப் பேச்சால் கிளாராவைக் கவர்ந்த முசோலினி அவளைத் தன் ஆசைநாயகி ஆக்கிக் கொண்டார். பொதுவாகப் பெண்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்ளும் முசோலினி கிளாராவிடம் மட்டும் அன்போடு பழகினார். உண்மையாகவே அவளை நேசித்தார்.
இரண்டாம் உலகப்போர்
1939ல் இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஹிட்லரும் முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். முதலில் இவர்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்தது.பிறகு போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும் முசோலினிக்கும் தோல்வி ஏற்பட்டது. இத்தாலி மக்களிடம் செல்வாக்கை முசோலினி இழந்தார். அவரை “பாசிஸ்ட்” கட்சி மேலிடம் பதவி நீக்கம் செய்து வீட்டுக்காவலில் வைத்தது. முசோலினியைக் காப்பாற்ற விரும்பிய ஹிட்லர் தனது உளவுப்படையை அனுப்பினார். உளவுப்படையினர் முசோலினியை மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.தன் மனைவியுடனும் கிளாராவுடனும் ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார்.


அப்போது “இத்தாலி விடுதலை இயக்கம்” என்ற புரட்சிகர இயக்கம் தோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட முசோலினி தன் மனைவியுடனும் காதலியுடனும் அண்டை நாடான சுவிட்சலாந்துக்கு தப்பி ஓட முடிவு செய்தார். இரண்டு இராணுவ லொறிகளில் தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் வழியிலேயே லொறிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியைக் கைது செய்தனர். இதைக்கண்ட முசோலினியின் காதலி கிளாரா லொறியில் இருந்து குதித்தார். அவளையும் பிடித்தார்கள். முசோலினியின் மனைவி லொறிக்குள் பதுங்கிக் கொண்டதால் அவள் மட்டும் தப்பித்துக் கொண்டாள்.


இது நடந்தது 1945ம் ஆண்டு ஏப்ரல் 27ம் திகதி. அன்று டோங்கோ நகரில் ஒரு அறையில் முசோலினியும் கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர். மறு நாள் மலைப்பகுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர். அங்கு நடு றோட்டில் நிற்க வைத்து சரமாரியாகச் சுட்டார்கள். முசோலினியும் கிளாராவும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இவர்களின் உடல்களை புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்குக் கொண்டு சென்றனர். அங்கு விளக்குக் கம்பத்தில் தலை கீழாகத் தொங்கவிட்டனர். அன்று மாலை உடல்கள் அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டு சென்று புதைக்கப்பட்டது. புதைப்பதற்கு முன்னர் குற்றவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து முசோலினியின் மண்டை ஓட்டைப் பிளந்து அவருடைய மூளையை எடுத்துச் சென்று விட்டனர். ஆராய்ச்சி செய்வதற்காகவோ!