அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வருட ஆரம்பத்தில் வரும் தமிழர் பண்டிகை என்பதால் எல்லோருக்கும் குதூகலம் அதிகம். தைமாதத்தின் பிறப்பை அறுவடைத்தினமாக, பொங்கல் தினமாக உலக தமிழினம் கொண்டாடி வருகின்றது. முன்புபோல எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வீட்டினுள்ளே பொங்கல் இம்முறை இடம்பெறுகின்றது. என்ன செய்வது! பொங்கல் தினத்தில் இன்பம் பொங்கிப்பெருகி வருவதென்று கூறுவார்கள். நமக்கு விவசாயத்திற்கு காலமெல்லாம் நன்மை பயக்கும் மழை, சூரியன், கால்நடை ஆகியவற்றுக்கு நன்றி கூறும் ஒரு நன்நாளாக இது அமைகின்றது. இந்தியாவின் பொங்கல் நடைமுறைகள் எங்களுக்கு ஒத்தவராது போலுள்ளது. பொங்கலுக்கு முதல் நாள் போகி என்று பழைய சாமான் எல்லாத்தையும் போட்டுக் கொழுத்துவார்கள். பொங்கல் அன்று பொங்கிச் சூரியனுக்குப் படைப்பார்கள். அடுத்தநாள் மாட்டுப்பொங்கல் என்று, விவசாயிகளின் நண்பன் உழைக்கும் மாட்டுக்கு அலங்காரம் செய்து பொங்கிப்படைப்பார்கள். மறுநாள் காணும் பொங்கல், உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று சந்தோஷங்களைப் பரிமாரிக் கொள்வார்கள்.

கடந்த வருட கசப்புக்களை மறந்து இவ்வருடத்தில் புதிதாக மாறுவோம். ஆதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வித்திடட்டும்.