எல்லா நாடுகளும் எதிர்நோக்கும் பிரச்சினையாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினை தான். சில நாடுகள் வறுமையிலும் சிக்கித் தவிக்கின்றன.
சர்வதேச பொருளாதார நெருக்கடி வறுமை ஒழிப்பில் ஆசிய நாடுகள் அண்மைக்காலமாக கண்டு வந்த முன்னேற்றங்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் பிராந்தியத்தில் மேலும் 2 கோடியே 10 இலட்சம் மக்களை வறுமைக்குள் தள்ளியிருக்கிறது என்ற அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டதாகும்.

“உலகளாவிய நிச்சயமற்ற நிலை யுகத்தில் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைதல்” என்ற தலைப்பிலான அறிக்கை சர்வதேச பொருளாதார மந்த நிலை ஆசிய பிராந்திய நாடுகளில் வாத்தகத்தை தளர்வடையச் செய்திருக்கின்றது. ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை மூலமான வருமானங்களைக் குறைத்திருப்பதுடன் வேலையில்லாத் திண்டாட்ட மட்டங்களையும் கடுமையாக அதிகரித்திருக்கின்றது.

உலகில் கடுமையான வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைப்பது தொடக்கம் எச்.ஐ.வி பரவலைத் தடுத்தல் மற்றும் சகலருக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவது வரை பல இலக்குகளை 2015 ஆம் ஆண்டளவில் எட்டுவதே இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐ.நாவினால் வகுக்கப்பட்ட மிலேனியம் அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும்.

ஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலையின் தாக்கங்கள் முதலில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் ஏற்படுகின்ற கடுமையான அதிகரிப்பினால் உணரக் கூடியதாக இருக்கின்றது. ஆசிய பசுபிக் பொருளாதாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. இதன் விளைவாக வேலைவாய்ப்புக்களும் தொழில் உருவாக்கங்களும் குறைவடையப் போவதுடன் அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான குறைப்புக்களை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. வறுமை அதிகரிப்பதுடன் சுகாதாரம் மற்றும் கல்வியின் தரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டு மிலேனியம் அபிவிருத்தி இலக்கு பின்னடைவை எதிர் நோக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

பொதுப்படையாக ஆசிய மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் சில நாடுகளில் அந்த முன்னேற்றம் மெதுவானதாகவே இருக்கின்றது. இந்தப் பிராந்தியம் உலகின் வறியவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்களையும் கொண்டதாக இருக்கின்றது.
இந்தியாவில் மாத்திரம் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். 1990-2005 கால கட்டத்தில் 150 கோடியில் இருந்து 97 கோடி 90 இலட்சமாகக் குறைத்துள்ளது. வறுமை மட்டத்தை 60 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைத்து சீனா அபாரமான முன்னேற்றத்தை காட்டியது.

ஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாகப் பெருமளவில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டதன் விளைவாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் “புதிய வறியவர்கள்” உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆசியாவில் வேலையில்லாமல் தவிப்பவர்கள் 2009ஆம் ஆண்டு 9 கோடி 80 இலட்சம் வரை அதிகரித்திருக்கின்றது.தொடர்ச்சியான வேலை இழப்பு போதிய சமூகப் பாதுகாப்பின்மையை மேலும் கூடுதல் எண்ணிக்கையான மக்களை வறுமையில் தள்ளிவிடக் கூடிய ஆபத்தான சூழ்நிலையை ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் எதிர்நோக்குகின்றன.

நாம் எல்லோரும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து ஓடி ஓடி நிம்மதியைத் தொலைக்கிறோம்.நம்மில் எத்தனை பேர் குடும்பத்துடன் வெளியில் கோயிலுக்கோ ஹேட்டலுக்கோ அற்லீஸ் பிக்னிக்கோ அடிக்கடி செல்கிறோம்.எத்தனை பேர் தினம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் அம்மா அல்லது அப்பாவிடம் பகிர்ந்து கொள்கிறோம்.அது வேண்டாம் எத்தனை கணவன்மார் மனைவியிடமாவது பகிர்ந்து கொள்கின்றனர் என்று கணக்கெடுத்தால் விடை 10ஐக் கூட தாண்டுமோ தெரியாது……..எத்தனை பேர் அடிக்கடி சிரிக்கிறோம்?
எல்லோரும் ஒரு மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதில் மட்டுமே வேறுபாடு இல்லை.அவர் அவர் சூழ்நிலைகளுக் கேற்றமாதிரி எல்லோருக்கும் ஒரு மன அழுத்தம்.முதல் மாத சம்பளம் வெறும்1000ரூபா.அதை அப்படியே அம்மாவிடமோ அப்பாவிடமோ கொடுத்து விட்டு தினமும் 10ரூபாய் வாங்கிக் கொண்டு அலுவலகம் சென்ற அனுபவம் பலருக்கும் இருக்கும்.அப்பொழுது இருந்த சந்தோஷம் இப்பொழுது கைநிறைய அதிகமாக சம்பளம் வாங்கும் போது இல்லையே ஏன்?அப்போது குடும்பத்துப் பொறுப்பு அப்பாவிடம் இருந்ததாலா?இல்லை.அப்படி இல்லை.அப்போது கவலையற்ற வாழ்வு.அப்போது எமக்காக மட்டுமே வாழ்ந்தோம்.இப்போது எல்லா உறவுக்காகவும் நாம் வாழ்கிறோம்.அதில் என்ன இருக்கிறது?எல்லோருமே அப்படித் தான் என்கிறீர்களா?ஆமாம்.ஆனால் நம்மில் எத்தனை பேர் இவ்வளவு சம்பாதித்தது போதும் என்று நினைக்கிறோம்?திரும்ப திரும்ப அந்த பணத்தை தானே நோக்கி ஓடுகிறோம்.அதனால்த்தானே நிம்மதியை சிரிப்பை சந்தோஷத்தை தொலைக்கிறோம்.எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வரட்டும் போகட்டும் அதற்காக சந்தோஷத்தை தொலைப்பானேன்.மன இறுக்கத்துடன் ஏன் வாழவேண்டும்.நாம் சந்தோஷப்படுவதை விட அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி அதில் சந்தோஷப்படுங்கள்.அதில் கிடைக்கும் சுகம் தனி.எக்ஸாம்பிள் ………..தினமும் ஒரு தடவையாவது அம்மாவின் சமையலைப் பாராட்டுங்கள்.பிறகு பாருங்கள் கவனிப்பு பலமாக இருக்கும்.ஓடி வரும் குழந்தையை அன்போடு தூக்கி கொஞ்சுங்கள்.அதை விட இன்பம் இல்லை இவ்வுலகில்.
ஒரு சம்பவம் சொல்கிறேன் படித்துப் பாருங்கள்.ஒருவர் புது கார் வாங்கி வீட்டிற்கு வந்தார்.காரைமுன் கூட்டிலே பாக்கிங் பண்ணிவிட்டு வீட்டின் உள்ளே செல்கிறார்.திறந்திருக்கும் ஜன்னல் வழியே பார்க்கிறார்.அவரது ஐந்து வயது மகன் அந்தக் காரில் ஏதோ கிறுக்குகிறான்.இவருக்கு வந்த கோபத்தில் புது கார் ஆச்சே…ஏதோ கிறுக்குகிறானே?என்று ஓடிச்சென்று கையில் கிடைத்ததை அவனுக்கு எறிந்தார்.
அவன் குழந்தை என்பதை கோபம் மறைத்துவிட்டது.ஒரே இரத்தம் குழந்தையின் கையில்.அதைப்பார்த்து அவர் மனைவி ஓடி வந்து குழந்தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போனாள்.டொக்டர் பரிசோதித்து விட்டு ஒப்பரேசன் செய்ய வேண்டும் என்றார்.தாயும் சம்மதித்துவிட்டாள்.அடுத்த நாள் அவன் கண்முழித்து தகப்பனைப் பார்த்து சொன்னான் “சரிப்பா எனி மேல் அது மாதிரி கிறுக்கமாட்டேன்”என்று….தகப்பன் குனிந்து பார்த்து விட்டு அதிர்ந்து போனார்.அவனின் கைவிரல் எடுக்கப்பட்டிருந்தது.மனம் நொந்து கொண்டு வீடு போனவர் காரைப்பார்க்கப் போகிறார் அப்படி என்ன எழுதியிருக்கிறான் என்று . DADY I LOVE U VERY MUCH அதைப் படித்துவிட்டு அழுது புலம்புகிறார்.எழுதியதை அழித்துவிடலாம் ஏன் புது காரே வாங்கலாம்.குழந்தையின் விரல் வருமா?அந்த ஒரு நிமிடம் அவனை யோசிக்காமல் கோபப்பட வைத்தது எது?கார் பணம் தான்.வாழ்க்கையில் பணத்தைவிட புகழைவிட அந்தஸ்த்தைவிட சந்தோஷமாக அனுபவிக்க எவ்வளவோ உள்ளது.அதைப் பெற உலகத்தை ரசிக்க வேண்டும்.அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.தனி மனிதன் சந்தோஷப்பட்டால் உலகம் தானாகவே அமைதி பெறும்.


அஜித் மாட்டர் சூடாகப்பேசப்படுற நேரத்தில நானும் எதையாவது எழுதத் தானே வேணும்;. அஜித், ரஜினி விஷயத்தில் நடிகர்கள் தரப்பில் துள்ளிக்குதிப்பார் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர் நம்ம ‘மகாநடிகன்’ சத்தியராஜ் தான். காரணம் காவேரி பிரச்சினை உண்ணாவிரதத்தின் போது ரஜினியை அந்தக் காட்டுக் காட்டியிருந்தார். அரசியலுக்கு வர்ர ஐடியாவே இல்லாத இந்த மனுஷன் தன் தலைவர்களுக்காக வீணாக சகநடிகர்களை பகைத்துக் கொள்பவர். சிவாஜி படத்திற்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தபோது ‘ரஜினி பதிலுக்கு தன் படத்தில வில்லனா நடிக்கணும்’ எண்டு கேட்ட ஆள் இவர்.

கலைஞரின் தீவிர ஆதரவாளன், (நாத்திகவாதி என்பதால்) பெரியாரின் கொள்கை பரப்பாளர். அஜித் பேசியதற்கும் ரஜினி எழுந்து கைதட்டியதற்கும் மறுநாளே இவர் தரப்பிலிருந்து எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கொஞ்சம் தாமதமாக இப்போது ஆரம்பித்திருக்கின்றார்கள். கலைஞர் விடயத்தில் அஜித் பேசியது சரியே! இதை என்னைப்போல் பெரும்பகுதி ஆதரிக்கின்றது. கலைஞரின் குடும்ப, சுயநல, நாறல் அரசியலை முழு தமிழினமுமே காறித்துப்புகின்றது.

திரைமறைவில் இடம்பெறும் அஜித் - ரஜினிக்கு எதிரான சதியின் இன்னொரு கட்டம் இது….

பாசத்(பரதேசி) தலைவனுக்கான பாராட்டு விழாவில் உண்மையற்ற பேச்சுப் பேசி திரையுலக ஒற்றுமையைக் குலைத்ததற்கு அஜித் வருத்தம் கேட்பது, அஜித் பேச்சுக்கு கைதட்டியதன் மூலம் நடிகர்களின் ஒற்றுமையைக் குலைத்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூட இருக்கிறது.

பெப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடும் இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று, ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.

அதேபோல, ஜாகுவார் தங்கம் மீது கல்வீசித் தாக்கிய அஜித் (முடிவே பண்ணிட்டாங்க போல!) மற்றும் அவரது மேனேஜர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்படுமாம். இந்த விவகாரத்தில் நடிகர் சங்க உறுப்பினரான ஜாகுவார் தங்கம் புகார் கொடுத்திருப்பதால், இந்த விவகாரத்தை சாதாரணமாக விட்டுவிட முடியாது என நடிகர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
நேற்றே அஜித் வருத்தம் தெரிவிப்பார் என்று நடிகர் சங்கம் எதிர்பார்த்ததாம். ஒரு பேப்பரில் வருந்துகிறேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வேலையைப் பாருங்கள்... இதெல்லாம் சகஜம் என்று சங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவர் அஜீத்திடம் சமரசமாக சொல்லிப் பார்த்தாராம்.

ஆனால் அஜித்திடமிருந்து அப்படி எந்த அறிக்கையும் வரவில்லை. எனவேதான் அடுத்த அஸ்திரமாக நடிகர் சங்க செயற்குழுவைக் கூட்டி, குழு உறுப்பினர்கள் சத்யராஜ், முரளி, எஸ்.வி.சேகர், சூர்யா, மயில்சாமி, சின்னி ஜெயந்த், மும்தாஜ், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, குயிலி, நம்பிராஜன், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்க, சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையில் புதிய முடிவு எடுப்பார்களாம்.

என்னதான் நடந்தாலும் அஜித் மாறக்கூடாது. சாக்கடை அரசியல் செய்பவர்கள், தங்கள் பினாமிகள் மூலம் சாக்கடையை சினிமாவிலும் கொட்டுகிறார்கள். என்ன என்னத்துக்கோ எல்லாம் கூடும் திரையுலகம் உங்கள் ஒற்றுமையைக் காட்ட இதில் கூடுங்கள் பார்க்கலாம்.

எத்தனை பேர் எத்தனையோ விதமாக எல்லாம் ட்ரைய் பண்ணியிருப்பாங்க. தோற்றது தான் கூடவா இருக்கும், ஜெயிப்பது ஒரு சிலரே! எதுக்கெண்டு கேக்கிறீங்களா… அது தான் தினம் ஏதாவது பேப்பர்ல போடுவாங்களே போட்டி நிகழ்ச்சிகள்.. அதை நிரப்பி போட்டா பரிசு, பணம் அது இதெண்டு ஏதாவது கிடைக்கும். குறைஞ்சது அழாமல் இருக்கிறதுக்கு ஆறுதல் பரிசு எண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒண்டு வந்து கொண்டு தான் இருக்கும்.
இதுகளுக்கு நிரப்பி அனுப்புறதுக்கே கொஞ்ச ஆக்களும் இருக்கிறாங்கள் தானே. அதுல என் நண்பியும் ஒருத்தி….

எனக்கு இதைக் கண்ணிலையும் காட்டக் கூடாது.


அவளுக்கு(நண்பி) வேலையே இது தான். எந்தப் பேப்பர்ல என்ன போட்டியோ அல்லது ஏதாவது அப்லிகேஷன் போடுறெண்டா காணும். படிப்பு விசயத்திலயும் தான், இப்படி போட்டி நிகழ்ச்சிகளிலும் தான். உடனே எழுதி அனுப்பி விடுவாள்.
நாங்கள் நக்கலடிக்கிறது உனக்கு ஏன்டி தேவையில்லாத ஆசை, நீ காப்பரேசனுக்கு ஆட்களை விண்ணப்பம் மூலம் தெரிவு செய்தால் அதுக்கும் போடுவாயடி எண்டு. நடக்காததைக் கூட கற்பனை பண்ணுவாள். இந்த விசயத்தில வைரமுத்துவை மிஞ்சிவிடுவாள். அப்படி ஒரு கற்பனா சக்தி அவளுக்கு.

அவள் எப்போதும் போஸ்ட் கார்ட் உடன் தான் திரிவாள். கண்ட உடனே வெட்டி ஒட்டிப் போட்டுவாள். அவளுமோ விர்றேல எண்டு எல்லாத்துக்கும் போட அதுவுமோ ஒவ்வொரு முறையும் கைநழுவிப் போய்விடும். பிறகென்ன ஓஓ… வெண்டு அழுறது தான் வேலை.
நெடுகலும் இதைக் கேட்டுக் கேட்டே எங்கட காது புளிச்சுப் போச்சு. அவள் தனக்கு கிடைக்கேல எண்டவுடன் தன்ர பாதையை மாற்றினாள். எவ்வாறெண்டு யோசிக்கிறீங்களா? தனக்கு கிடைக்காடிலும் பறவாயில்ல தன்னோட பரண்ட்ஸ்சிற்;கு கிடைக்கவேணும் எண்டு ட்ரைய் பண்ணினாள்.

ஒருமுறை அலறியடிச்சுக் கொண்டு போன் பண்ணினாள். என்ன எண்டன்? எடியே!. நான் போட்ட குறுக்கெழுத்துப் போட்டியில் அவளுக்கு (என் இன்னொரு ப்ரண்ட்) கிடைச்சிட்டுது எண்டு. நான் நினைச்சன் இப்பவாவது அவள் கொஞ்சம் சந்தோசப்பட்டும் என்று… இப்படியே அவளும் தனக்குப் போடுறதும் வேற யாருக்கும் போடுறதுமாக இருந்தாள். தனக்கு மட்டும் அதிஸ்டம் இல்லை எண்டு தேவாரம் பாடுவாள். அதைக் கேட்டு உண்மையான தேவாரம் கூட மறந்து போச்சு. நிலைமை பரிதாபம் தான்.
எள்ளோட சேர்ந்து எலிப்புழுக்கையும் காயுது. அது தான் கூட இருக்கிற எங்களின்ர நிலைமை அப்பிடித் தான்.
நீங்கள் யாராவது இப்படி கஸ்டப்பட்டிருக்கிறீங்களா.?...

கொஞ்ச நாளைக்கு அவள் ஒண்டுமே அனுப்பாமல் இருந்தாள்…
பாடின வாயும் ஆடின காலும் சும்மா இராது தானே!… திரும்பத் தொடங்கிட்டாள். பாவி தான் அனுப்பிப் போட்டு எங்கட கழுத்தையெல்லோ அறுக்கிறாள். விழுங்கவும் முடியாமல் மெல்லவும் முடியாத நிலை தான் எங்களுக்கு. நாசமாப் போன கடவுளும் நாங்கள் படுகிற கஸ்டத்தைப் பார்த்திட்டாவது அவளுக்கு ஒண்டையும் குடுக்கிறான் இல்லை.
அவள் தன்ட சோகத்தை சொல்லும் போது ரம்ளர்ல தண்ணி நிரப்பி குதிச்சு சாகணும் போல இருக்கும்.
அப்படிக் கொடுமை….

என்றாவது ஒரு நாள் கிடைக்காமலா போகும் என்ற நம்பிக்கையுடன் அவளைத் திட்டிக் கொண்டிருந்தோம்.
முந்தின மாதிரி ஒரு நாள் கோல் பண்ணினாள். நானும் அறக்கப் பறந்து கொண்டு ரெலிபோனை எடுத்து ஹலோ! எண்டன். அவளே தான்! ஏன்டா இந்த விடிய முந்தி எடுத்தாள். முழுவியளம் அந்த மாதிரித்தான் என்று நினைக்கிறதுக்குள்ள அவள் விஷயத்தை சொல்லி முடிச்சிட்டாள்.

திரும்பக் கேட்டன். இவள் ராத்திரி கனவு கினவு கண்டிட்டு அலம்புறாளோ எண்டு நினைச்சன். உண்மைதான்.. அவளுக்கு நினைச்சதை விட பெரிய தொகை பரிசா விழுந்திருக்குது. கேட்ட எனக்கே நம்ப முடியாமல் இருந்தது… இண்டைக்காவது வீஸாப் பிள்ளையார் ஒரு மாதிரி கண் திறந்திட்டார் போல… அவ்வளவுக்கு அவருக்கு கொடுமை கொடுத்திருக்கிறாள் எண்டு தெரியுது.

பிறகென்ன எங்கட வரட்டு கௌரவத்தை பாக்காமல் அவளைக் கெஞ்சிக் கேட்டு அழுது புரண்டு அவளுக்கு கிடைச்ச பெருந்தொகையிலை நாங்க போய் சாப்பிட்டது தான்.

காதலிப்பவர்களில் சிலருக்கு ஒரு கொள்கை இருக்கின்றது 'தங்கள் காதலை காதலர் தினத்தன்று தெரியப்படுத்துவது" எண்டு. இது ஒரு வேண்டாத வேலை ... ஒருவனோ அல்லது ஒருத்தியோ இன்னொருவரை காதலிக்கும் போது அதனை வெளிப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் காதல் நிறைவேறாத சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, இதை தான் சொல்வார்கள் "காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன கதை" எண்டு.

காதலர் தினத்தின் பின்னரான நாட்களில் தமிழகத்தில் சில வேண்டத்தகாத உயிர் கொலை , தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன, யாழ்பாணத்தியும் ஒரு சம்பவம் நடந்ததாக கேள்விப்பட்டேன். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! தற்கொலை என்பது இயலாதவன் முடிவு. தன் காதல் நிறைவேறவில்லை என்பதற்காக கொலை செய்பவனை என்னவென்று சொல்வது. இனி சம்பவங்களை பார்ப்போம்.

காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஷர்மிலி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தாரர். இவரை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார். அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

காதல் தோல்வியால் மனமுடைந்த கல்லூரி விரிவுரையாளர், கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சண்முகவர்த்தினி(26), ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். மாலை நேரத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். மகளது காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சண்முகவர்த்தினியை காலையிலும், மாலையிலும் பெற்றோர் பின்தொடர்ந்து வந்து கண்காணித்ததாக கூறப்படுகிறது. சண்முகவர்த்தினி தினசரி பொறியியல் கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு வந்து செல்வார்.நேற்று காலை 9:30 மணிக்கு சண்முகவர்த்தினி கல்லூரிக்கு வந்தார். சிறிது நேரத்தில் திடீரென கல்லூரியின் ஐந்தாவது மாடிக்கு சென்ற சண்முகவர்த்தினி, மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கல்லூரி துணை முதல்வர் ராமமூர்த்தி, கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சண்முகவர்த்தினியை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டர்கள், சண்முகவர்த்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சண்முகவர்த்தினி, ஜெகன் என்பவரை காதலித்து வந்ததாகவும், இதை பெற்றோர் கண்டித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று சண்முகவர்த்தியிடம் ஜெகன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்தே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). இவர் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார். ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர்.

மூன்று சம்பவங்களும் எப்படி இருக்கின்றது, ஒன்று கொலை, மற்றையது தற்கொலை, மூன்றாவது வன்முறை, இந்த மூன்றையும் காதல் எனலாமா?

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 8ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் வந்தாலே சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது. இன்று உள்நாட்டு , வெளிநாட்டு ஊடகங்களின் முக்கிய செய்திகளில் ஒன்று "ஜெயசூரியாவின் தேர்தல் அறிவிப்பு"

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இம்முறை பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்துள்ளது. அதில் ஒருவர் ஜனாதிபதியின் புத்திர சிகாமணி நாமல் ராஜபக்ஷ. இன்னொருவர் எங்கள் தலை, அது தாங்க சனத். கிரிக்கெட்டில் ஆடியது போதவில்லை போலும், சனத் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது தெரிந்த விடயமே! இந்நிலையில் ஜெயசூர்யாவை தேர்தலில் போட்டியிட வருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்ட ஜெயசூர்யா, மாத்தறை மாவட்டத்தில் அவர் போட்டியிடுவார் என்றும், விருப்ப மனுவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் விரைவில் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயசூர்யா கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒப்பந்தம் போட்டுள்ளது. . எனவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கிரிக்கெட் சபையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுபற்றி ஜெயசூர்யாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, 'தேர்தலில் போட்டியிட என்னை அழைத்துள்ளனர். கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது' எனக் கூறிவிட்டார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றாக ஓய்வு பெற்ற பின்னர் சனத் இந்த முடிவை அறிவித்திருக்கலாம், ரசிகர்கள் பெரும்பகுதியினர் சனத்தை கொஞ்சமாவது வெறுப்பார்கள். பெரும்பாலும் சனத்தின் வெற்றி உறுதி. அதில் சந்தேகம் வேண்டாம்.

இதற்கு முந்தைய இந்தியப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து பெரும் சாதனைப் படைத்துள்ளது ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் திரைப்படம். இந்திப் படங்களுக்கு பெரிய சந்தை வாய்ப்புக்கள் இல்லாத தமிழகத்தில்கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போடுகிறதாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாடினால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே, ஷாருக்கானை தேசத் துரோகி என்று குற்றம்சாட்டி, பெரும் கலவரத்தைத் தூண்டப் பார்த்தது பால்தாக்கரேயின் சிவசேனை கட்சி.

கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசான போது மும்பை நகரம் முழுவதும் சிவசேனா கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல தியேட்டர் அதிபர்கள் பயந்து போய் படத்தை நிறுத்தினார்கள். ஆனால் மராட்டிய அரசும், ரசிகர்களும் ஷாருக்கானுக்கு ஆதரவாக களம் இறங்கியதும் மறுநாள் பல தியேட்டர்களில் படம் ரிலீசானது. தற்போது அங்கு 80-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ஓடுகிறதாம். இந்தி திரையுலகில் சமீபத்திய படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் மை நேம் இஸ் கான் படம் முறியடிக்கும் என்கின்றனர். தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் ஒரு டிக்கெட் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகின்றது. பெர்லின் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு ஒரு டிக்கெட் ரூ.60 ஆயிரம் என விற்கப்பட்டு சில நிமிடங்களிலேயே முடிந்ததாம்.

அமெரிக்காவிலும் இந்தப் படம் சக்கைபோடு போடுகிறது. அந்த படம் ரிலீசான 3 நாட்களில் 1.86 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. சென்னையில் 5 தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. இப்படம் இலங்கை, எகிப்து , நியுசிலாந்து,அமேரிக்கா உட்பட 45 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூல் மட்டும் 250 மில்லியன் இந்திய ரூபாய்களாம்.

கல்கத்தா டெஸ்டில் இந்திய பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது போல் படுகின்றது. ஹஷிம் ஆம்லா, அல்விரோ பீட்டர்சன் சதம் அடிக்க, ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த தென் ஆப்ரிக்க அணி, பின் ஷாகிர், ஹர்பஜன் பந்துவீச்சில் சரிந்தது. முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்து திணறியது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. மிக முக்கியமான இரண்டாவது டெஸ்ட் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் அரங்கில் முதலாவது இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது.

இந்திய அணியில் பெரிதாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. விரிதிமன் சஹா நீக்கப்பட்ட நிலையில், அனுபவ லக்ஸ்மன் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில், முதுகுப் பிடிப்பால் அவதிப்பட்ட விக்கெட் காப்பாளர் பவுச்சருக்கு பதிலாக அறிமுக வீரராக அல்விரோ பீட்டர்சன் வாய்ப்பு பெற்றார். விக்கெட் காப்பாளராக டிவிலியர்ஸ் கடமையாட்டினார். நானயசுலட்சியில் வென்ற தென் ஆப்ரிக்க அணித்தலைவர் ஸ்மித், துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

விரல் காயத்தை பொருட்படுத்தாது களமிறங்கிய ஸ்மித்(4), ஷாகிர் பந்தில் பரிதாபமாக போல்டானார். இதற்கு பின் ஹஷிம் ஆம்லா, அல்விரோ பீட்டர்சன் இணைந்து கலக்கினர். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், இரண்டாவது விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் சேர்த்தனர். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த ஆம்லா, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் 60 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஹர்பஜன் சுழலில் அவுட்டாக தெரிந்தார். ஆனால், முதல் "ஸ்லிப்பில்' நின்ற லக்ஸ்மன் கைநழுவினார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஆம்லா, டெஸ்ட் அரங்கில் தனது 9வது சதம் கடந்தார். மறுபக்கம் அறிமுக டெஸ்டில் விளையாடிய பீட்டர்சன் முதல் சதம் எட்டினார். இவர் 100 ஓட்டங்களுக்கு ஷாகிர் வேகத்தில் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் ஆம்லாவும் (114), ஷாகிர் பந்தில் வெளியேற, தென் ஆப்ரிக்காவுக்கு சிக்கல் ஆரம்பமானது. தேநீர் இடைவேளைக்கு பின் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

போட்டியின் 68வது ஓவரை வீசிய ஹர்பஜன் முதல் பந்தில் பிரின்ஸ்(1) எல்.பி.டபிள்யு., முறையில் பெவிலியன் திரும்பினார். இரண்டாவது பந்தில் டுமினி(0) வெளியேற, "ஹாட்ரிக்' வாய்ப்பு காத்திருந்தது. ஆனால், மூன்றாவது பந்தை ஸ்டைன் தடுத்து ஆட, வாய்ப்பு பறிபோனது. போதிய வெளிச்சம் இல்லாததால் 9 ஓவர்கள் முன்னதாகவே முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் ஷாகிர், ஹர்பஜன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

நேற்று அபாரமாக ஆடிய 29 வயதான அல்விரோ பீட்டர்சன், 100 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆன்ட்ரூ ஹட்சன்(167, எதிர், வெ.இண்டீஸ், 1992), ஜாக்ஸ் ருடால்ப்(222 ரன், எதிர், வங்கதேசம், 2003) ஆகியோருக்கு பின் அறிமுக டெஸ்டில் சதம் அடிக்கும் மூன்றாவது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். சர்வதேச அளவில் 87வது வீரரானார்.

ஹர்பஜன், தனது ராசியான ஈடன் கார்டனில் மீண்டும் கலக்கினார். நேற்று டுமினியை வெளியேற்றிய போது, டெஸ்ட் அரங்கில் 350வது விக்கெட்டை பெற்றார். கும்ளே(619), கபில்தேவுக்கு(434) பின் இம்மைல்கல்லை எட்டும் மூன்றாவது இந்திய வீரரானார். டெஸ்ட் வரலாற்றில் 350 விக்கெட் வீழ்த்தும் 18வது வீரரானார்.

வியாபாரம் என்று ஆரம்பித்ததோ அன்றிலிருந்து தொடங்கிய உறவு.. முத்தையும் யானைத் தந்தத்தையும் கொடுத்து மட்பாண்டமும் பட்டுத் துணியும் வாங்கினோம்.

7ம் ஆண்டு 8ம்ஆண்டில் கட்டாயம் நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். நினைவிருக்கின்றதா?…
இலங்கையிலிருந்து சீனாவிற்கான ஏற்றுமதி கடந்த மூன்று வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு 37 மில்லியன் டொலராக இருந்த ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டு 70 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்ட காலப்பகுதியில் கூட சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது. ஆனால் 2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 2007-2009 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சீனாவுக்கான ஏற்றுமதி கட்டமைப்பில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் ஏற்றுமதிக்கான பட்டியலில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டது.

சீனாவின் நுகர்வுச் சந்தையை இலக்காகக் கொண்டு புதிய ஏற்றுமதிப் பொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட விளம்பர நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டது.முன்னர் சீனாவிற்கு மூலப் பொருட்களே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

மொத்த ஏற்றுமதியில் 40 வீதமானவை மூலப் பொருட்களாகவே காணப்பட்டன. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விளம்பர நடவடிக்கைகள் மூலம் தேயிலை இறப்பர் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆபரணக் கற்கள்இமீன் உற்பத்திகள் நகைகள் போன்றவற்றை நோக்கி சீனாவுக்கான ஏற்றுமதி திரும்பியுள்ளது.



தமது உற்பத்திப் பொருட்களை சீனாவில் விளம்பரப்படுத்துவதற்காக இலங்கை வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கான கொள்கை வகுப்பாளர்கள் பீஜிங்கில் உள்ள தூதரகத்துடன் சேர்ந்து சீனா முழுவதும் தெரிவு செய்த முக்கிய இடங்களில் வர்த்தக கண்காட்சிகளை நடத்தினர்;. சீனா வர்த்தக ஆதரவு அமைப்புக்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய இலங்கைத் தூதரகம் அவர்களுடன் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டது.அவற்றின் மூலம் சீன வர்த்தகக் கண்காட்சிகளில் இலங்கைப் பொருட்களுக்கு இலவசமான காட்சி அறையை மிகக் குறைந்த கட்டணத்தில் பெற முடிந்தது.

இத்தகைய நடவடிக்கைகளை அடுத்து கடந்த மூன்று வருட காலத்தில் சீனாவில் நடைபெற்ற ஆகக் கூடுதலாக 52 வர்த்தகக் கண்காட்சிகளில் இலங்கையின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில் 25 கண்காட்சிகள் கடந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்டன. தமது வருடாந்த குன்மிங் வர்த்தகக் கண்காட்சியுடன் இணைந்து இந்த வர்த்தகக் கண்காட்சியையும் நடத்தலாம் என்று சீனா வர்த்தகத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.



நடுத்தர வருமானம் கொண்ட சீன மக்களின் வருவாய் அதிகரித்திருக்கும் நிலையில் இலங்கைத் தூதரகம் ஆபரணக்கற்களின் விற்பனையை அங்கு முன்னகர்த்தி இருப்பது பெரும் பயனைத் தந்துள்ளது. இதன் மூலம் 2006 ஆம் ஆண்டில் 32ஆவது இடத்தில் இருந்த சீனாவிற்கான இலங்கையின் ஆபரணக் கல் ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 19 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஆகக் கூடுதலாக 20 இலங்கையின் ஆபரணக் கல் நிறுவனங்கள் பீஜிங் கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தன. அதே சமயம் சீனப் பொருட்களுக்கான இறக்குமதித் தேவையும் காணப்படுகிறது. அதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக சமநிலை காணப்படவில்லை. சீன இறக்குமதியானது பெருமளவு முதலீட்டுப் பொருட்களாகவே காணப்படுகிறது. உழவு இயந்திரங்கள் வாகன உதிரிப் பாகங்கள் இயந்திங்கள் வேதியல் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் சீனப் பொருட்களுக்கு சந்தையில் அதிகளவு கிராக்கி; காணப்படுகிறது. இதன் மூலம் மறைமுகமான நன்மையை இலங்கை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவில் இக்கட்டான நிதி நிலையில் அரசாங்கம் இருப்பதால் ஆசிய பங்குச் சந்தையில் தாக்கம் நிலவுகிறது. நவம்பர் மாதம் முதல் நியூயோக்கின் மோசமான நிதி நிலைமையே இதற்குக்காரணம். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஒரு வியாபார முறிவின் எதிர் தாக்குதலாகும்.

ஹேன் சென்ங் நிறுவனம் 589.67 புள்ளிகள் 2.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட் டைம்;ஸ் சுட்டெண் 2.09 சத வீத வீழ்ச்சியில் அல்லது 57.35 புள்ளிகளுக்கு 7.63 ஆகவிருந்தது.

டோக்கியோவில் நிக்கி 225 சுட்டெண் 293.33 புள்ளிகள் அல்லது 2.83 சதவீத வீழ்;;ச்சி;களில் 10062.65 ஆக இருந்தது. அதே வேளை டொயாட்டா பங்குகளில் 0.15 சதவீதம் அதிகரிப்பும் காணப்பட்டது.

ஆசிய வர்த்தகத்தில் 1.3726 டொலராகவிருந்த யூரோ கடந்த கிழமை 1.3704 டொலராக குறைந்தது. கடந்த கிழமை ஆய்வின் படி அமெரிக்காவி;ல் நலிவடைந்துள்ள வேலையற்றோர் தரவுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதலீட்டாளர்களை பின்னடையச் செய்துள்ளது.

சந்தை பதற்ற சூழ்நிலை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஸ்பெயின் போத்துக்கல் ஆகியவை பாதிப்புக்குள்ளான கிறீஸ் போல ஆகலாம் என கருதப்படுகிறது. லண்டனில் பென்ச் மார்க் எப்டி எஸ் ஈ 100 சுட்டெண் 2.17 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. சீனாவில் ஷாங்சாய் கூட்டுப் பொருள் சுட்டெண் 2.961.00 க்கு 1.21 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. சீன அதிகாரிகளின் சமீபத்தைய நடைமுறைகளின் பின்னர் வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறைகளைச் சுருக்கியுள்ளது. உலகடங்கிலும் நுகர்வோர் சுட்டெண் குறைவடைந்துள்ளது.

ஆசிய வர்த்தகத்தில் தொடர்ந்தும் எண்ணெய் கொள்வனவிலும் நஷ்ட நிலை காணப்படுகிறது. நியூயோக்கின் பிரதான ஒப்பந்தமான லேட் சுவீட் மசகு எண்ணெய் மார்ச் மாத விநியோகம் 23 சத வீதத்தால் வீழ்ச்சியுற்று பெரல் ஒன்று 72.91 டொலராக கொள்ளப்படுகிறது. யூரோ வட்டத்தில் சீரற்ற நிலையில் விளங்கும் கடன் நெருக்கடி நாணய கரன்சி யூனியனில் சாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்தலாம்.இறையாண்மையுள்ள 16 நாடுகள் வித்தியாசமான பொருளாதாரத்தில் இதில் அடங்கியுள்ளன.

முன்தின காலம் இப்ப மலையேறிப்போச்சு இண்டைக்கு காலையில றேடியோ கேட்ட போது தான் நினைச்சன்.


என்னென்று பார்க்கிறீங்களா? பெரிய விசயமா இல்ல ஆனால் இன்றைய கால கட்டத்தில உண்மையாக பாரதூரமான விஷயமாகத் தான் மாறி வருகிறது.
நாங்கள் முதலாம் ஆண்டு படிச்சது என்றது பெரிய விஷயமில்லை. 6 வயது வந்த உடனே பக்கத்தில உள்ள பள்ளிக் கூடத்தில கொண்டு போய் சேர்த்து விடுவினம். பிறகென்ன எங்கட விளையாட்டுத் தான்.

ஆனா இண்டைக்கு முந்தின மாதிரி லேசுப்பட்ட காரியமில்லை.
ஆண்டு ஒண்டுக்கு பிள்ளையை பள்ளிக் கூடம் சேர்ப்பது. பள்ளிக் கூடம் சேர்ப்பது என்றால் கேள்விக்கு மேல கேள்வி கேட்டுக் கொல்றாங்கள். அதைவிட உள்ளாலே சம்திங் கேட்கிறாங்கள். பள்ளிக் கூடத்துக்கு அது செய்யுங்கோ இது செய்யுங்கோ எண்டு அரிச்சு எடுக்கிறாங்கள்.


றேடியேவில ஒரு செய்தி கேட்டன் “உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக் கடிதத்துடன் தரம் ஒன்றுக்கு மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.;”


கேட்டவுடன் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னடாப்பா இதுக்கெல்லாமா கோட்டுக்குப் போறாங்கள். காணிப் பிரச்சினை, டிவோஸ் எண்டாத்தான் கோட்டு வாசல் ஏறுவோம். இப்ப உண்மையில காலம் மாறித்தான் போச்சு. ஏன் இந்த நிலை உருவானதென்றால்….நாங்கள் தான் உருவாக்கியிருக்கிறோம்.
இருக்கிறவன் அள்ளி எறிகிறான். இல்லாதவன் பள்ளிக் கூடத்தில இருந்து தூக்கி எறியப்படுகிறான். சந்தர்ப்பத்துக்கு அஜித்தின் பாட்டு ஞாபகம் வருது….


“கலைமகள் தனது பிள்ளையைச் சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்.”


நடைமுறைக்குப் பொருத்தமானது தான். உண்மையில் சரஸ்வதி ப+மிக்கு வந்தால் இது தான் நடக்கும். நான் அறிந்தவரை எத்தனையோ பிள்ளைகள் இது வரை பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில இருக்குதுகள்.
இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தி; எந்தப் பிரயோசனமும் இல்லை. கல்வி கானல் நீராகத்தான் போகிறது. இலங்கையில தரமானது அது ஒண்டு தான் இப்ப அதுவும் இல்லாமல் போகுது. எதிர்காலம் கேள்விக் குறி தான். எத்தனையோ சட்டங்களைக் கொண்டுவாறாங்கள்.இதைப்பற்றி யாரும் கவனிக்கிறாங்கள் இல்லையே..



பிள்ளையைப் பள்ளிக் கூடம் சேர்க்கப் போய் அதிபருக்கு கார் வாங்கிக் கொடுத்த கதையும் இருக்கு.(பள்ளிக் கூடத்தைக் குறிப்பிட விரும்பவில்லை.) ஆண்டு ஒன்றுக்கே இந்த நிலை என்றால்…. வேற அலுவல் செய்யுறது லேசுப்பட்ட காரியமா?



அரசியலும் ஊழலும் புகுந்திராத இடமாக இருந்த ஒன்று பள்ளிக்கூடங்கள் தான் இப்ப அதுவும் போச்சு……


“வெற்றியை நோக்கித்தான் வாழ்க்கை நகர வேண்டும்” “வெற்றி தான் வாழ்க்கை” என்றெல்லாம் பல பேர் பல மாதிரி அட்வைஸ் பண்ணுவாங்கள். நானும் பல தடவை கேட்டிருக்கிறேன். நீங்கள் எத்தனையோ பேர் கேட்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கூட மாட்டியிருப்பீர்கள்.

இப்ப எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது.

நீண்ட காலமாக என்னோடே படிக்கும் நண்பரின் ஞாபகம் வருகிறது. நான் அட்வைஸ் பண்ணப் போறதில்லை. அப்பப்ப கொஞ்சம் சொல்லுவன். அது கூட சிலருக்கு தாங்க முடியாம இருக்கு…. நான் படிப்பு விஷயத்தில மட்டும் கொஞ்சம் சொல்லுவன். என்னுடைய நண்பர் படிப்பு விஷயத்தில அலட்சியமாக இருப்பார். நான் நெடுகலுமே அதைப்படி, இதைப்படி என காதுக்குள்ள கூவிக் கொண்டே இருப்பேன். அவனோ அதைக் கேட்பதாக இல்லை. “விரும்பினா நீ படி, நான் எனக்கு தேவையானதைத் தான் செய்ய முடியும். எல்லாத்துக்கும் உன்னைப் போல அவாப்பட முடியாது.” இப்படிப் பேச்செல்லாம் வாங்கியிருக்கன்.

இதெல்லாம் ஏன்?..............

வாழ்க்கை, வெற்றி, இலக்கு என்றெல்லாம் அடுக்கும் வார்த்தைகளுக்காகத்தான். உண்மையில் வெற்றி தோல்வியை நாங்கள் தான் உருவாக்கியிருக்கிறோம். கிடைச்சால் ஓ.கே இல்லாட்டி அப்சற் தான். ஆராய்ந்து பார்த்தால் வேறு பட்ட முடிவு தான் பதிலாகிறது. வெற்றி தான் வாழ்க்கை என்றால் இவ்வளவு சாதிக்கும் மனித இனத்துக்கு மரணம் ஏது?.. தோல்வி தான் வாழ்க்கை என்றால் மூடிய இமைகள் திறப்பது ஏன்?.... இரண்டும் நிகழ்வது தான் வாழ்க்கை.
வெற்றியைத் தீர்மானிப்பது இலக்கா? முயற்சியா? என்றால, பதில் அவரவர் மனோவலிமையைப் பொறுத்தது. வெற்றி என்பது எமது நிழல் போல. அதை முன் நிறுத்துவது அவரவர் கெட்டித்தனத்தில் தான் தங்கியுள்ளது. அதைப் பிடிக்க முயன்றால் தோல்வி தான் நிச்சயம்.

அடுத்த முக்கியமான கட்டம் எமது இலக்குக்கு ஏற்ற மாதிரி பாதையை சீர்ப்படுத்த வேண்டும். சில வேளைகளில் இலக்கும் தவறும் சூழ்நிலை வரும். அது விதியோ என்னவோ தெரியல…. நான் விதி பற்றி கதைக்கல…. அது பற்றி கதைத்தால் நாள் போதாது.

குதிரை பந்தயத்தில் வெற்றி பெறுகிற தென்றால் அந்த ரகசியம் குதிரைக்குத் தான் தெரியும். சாட்டையின் முழு அடியின் வலியையும் தாங்கியிக்கும். அவ்வளவு தான். இலக்கிற்கு ஏற்ற மாதிரி தெரிவை சரியா செய்ய வேண்டும். “சொய்ஸ்” என்ற சொல் வாழ்க்கையில் முக்கியமானது. பல விஷயத்தை வாழ்க்கையில் தீர்மானிக்கிறது.

இப்பிடி கதைத்துக் கொண்டு போக தற்கொலை ஞாபகம் வருகிறது. இப்ப எதற்கெடுத்தாலும் உடனே தற்கொலை செய்கிறார்கள். இது சர்வசாதாரண விடயமாக மாறிவிட்டது. பரீட்சையில் பெயிலானால், காதல் தோல்வி, கடன் தொல்லை என்றால், வியாபாரத்தில் நஷ்டமானால் உடனே தற்கொலை செய்கிறார்கள்.

இப்படியே போனால் நினைத்தது நடக்கா விட்டால் கூட தற்கொலை செய்ய வேணுமெல்லோ..! இதற்குக் காரணம் நாம் தீர்மானித்த பாதையில் ஏதோ பிழை நிகழ்ந்து விட்டது அல்லது ஏதோ ஒரு விடயத்தில் கவனமில்லாமல் இருந்திட்டம் அவ்வளவு தான்.

இதை சரி செய்தால் நாளைக்கு நினைப்பது நடக்கும் நாமே ராஜா ஆகலாம். இலக்கு முடிவதில்லை ஒன்றை அடைய இன்னொன்று தானகவே முளைவிடும். தடுக்கவும் இயலாது முடக்கவும் இயலாது. காரணம் இலக்கு தான் ஒவ்வொரு நாள் வாழ்வையும் நகர்த்தப் போவது. இலக்கை அவன் அவன் தீர்மானித்து விட முடியாது. தேவையைப் போல நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும்.

தற்செயலாக இன்று இலக்கில்லாதவர்கள் உடனே ஏற்படுத்துங்கள். ஏனென்றால் நாளை என்பது உங்களுக்கு உரிமையற்றதாகி விடும்.
உரிமை இல்லாதவன் வாழ்ந்து என்ன பலன்…?

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிரணியின் பிரதான வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 175 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். இருவருக்கும் இடையில் 18 இலட்சத்து 42 ஆயிரத்து 749 வாக்குகள் வேறுபடுகிறது. பெரு வெற்றியை இந்த வேறுபட்ட வாக்குகள் தான் பறைசாற்றுகிறது. 22 தேர்தல் மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ 16 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா ஏனைய 06 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.



தேர்தல் முடிவு வெளியான நிமிடத்திலிருந்து இலங்கை அரசியலில் பெரு வீச்சான அதிர்வுகளுடன் புயலும் வீசத்தொடங்கி விட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த கட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் நகர்வுகள் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் தலைவிதி எவ்வாறு அமையப் போகிறது? என்பது குறித்து வினாக்கள் எழத் தொடங்கி விட்டன. எல்லோருமே விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் சிறுபான்மை இனமே இல்லை என்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் இந்த நாடு பெரும்பான்மை இனம், தமிழர் சிறுபான்மை இனம் என பிரிந்து கிடப்பதைத் தெளிவாக விளக்குகிறது. அதே வேளை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் போரின் முடிவுடன் தகர்ந்து போய் விடவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் என இனம் காட்டிக் கொள்வோர் அரசாங்கத்தின் சார்பாக சரியான முறையில் அபிவிருத்தி உட்பட அனைத்து விடயங்களிலும் சேவையாற்றத் தவறியதன் விளைவாகவே மக்கள் இம் முடிவை எடுத்தனர்.


தமிழ் பேசும் மக்களின் இம்முடிவு குறித்து அவர்கள் மீது எவரும் பகைமை பாராட்டுவதிலோ அல்லது குற்றம் காண்பதிலோ அர்த்தம் இல்லை. பெரும்பான்மை இனம் தங்களது உள்ளக் கிடக்கைகளைத் தெரிவிக்க எந்தளவு உரிமை இருக்கிறதோ, அதேயளவு உரிமை தமிழ் பேசும் மக்களுக்கும் உண்டு. அந்த வகையில் ஜனநாயக ரீதியாக தமது முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் தமிழ் பேசும் வேட்பாளர்களுக்குத் தமது வாக்குகளை அள்ளிக் கொட்டவில்லை. இன ரீதியாகவும் செயற்படவில்லை. நாடு பிளவுபட வேண்டும் என கோரவும் இல்லை. பெரும்பான்மை இன வேட்பாளர்களுக்குத்தான் தமது வாக்குகளை அளித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உணர்வுகளை மதித்தாகவே வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்குக் கூடுதலான ஆதரவை வழங்கினார்கள் என்பது பிரச்சினையல்ல. சுமார் 30 வருட கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து தோன்றியிருக்கும் சூழ்நிலையில் ஜனநாயகச் செயன்முறைகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டியுள்ளமை உற்சாகம் தருவதாக உள்ளது. தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளினால் ஜனாதிபதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதில் அக்கறை காட்டியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொடரும் பதவிக் காலத்தில் தமிழ் பேசும் மக்கள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்திய உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை இன மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைக்கான தீர்வினை முன்னெடுப்பதற்கு தடைகள் இருப்பதாகக் கருத முடியாது. போரினை முடிவுக்கு கொண்டு வந்தது போல் இன விவகாரத்திற்கான தீர்வு தனது ஆட்சிக் காலத்திலே காணப்படும் என்று ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்ததை இங்கு குறிப்பிடுகின்றேன்.


தொடரும் ஆட்சிக்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற வேண்டும். தூக்கியெறியப்படக் கூடாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Followers

Blog Archive

About this blog

Labels

Blog Archive