மனிதர்களில் குழந்தைகளை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இதற்கு விதி விலக்கு இல்லை என்றே சொல்லலாம். யாராவது குழந்தைகளை வீதியில் தூக்கிச் சென்றால், அல்லது பஸ்ஸில் எங்களைப் பார்த்துச் சிரித்தால் உடனே எங்களை மறந்து குழந்தையிடம் கதை கேட்போம், கிள்ளுவோம், தூக்குவதற்கு எத்தணிப்போம். இது சாதாரண மனித இயல்பு. காரணம் குழந்தைகளைக் கண்டவுடன் எங்கள் மனம் இயல்பாகவே ரசிக்கத் தொடங்குகின்றது. அப்படி, எந்த ஜீவன்களுடனும் ஒப்பிட முடியாத ஒப்பற்ற செல்வங்கள் தான் குழந்தைகள்.
நம்மவர்களிடையே சில தம்பதியர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தவம் கிடப்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஏறாத கோயில்கள் கிடையாது. பிடிக்காத விரதங்கள் கிடையாது. பார்க்காத வைத்தியர்கள் கிடையாது. எத்தனையோ குடும்பங்களில் குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து வரை போயிருக்கிறார்கள்.
ஆனால் இந்த காலத்தில் எல்லாம் நவீன மயமாகி விட்டது. பெண் கருத்தருக்க முடியாவிட்டால், பரிசோதனைக்குழாய்.. அதுவும் இல்லாவிட்;டால் குளோனிங். எனவே பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் பாசம் அறவே அற்றுப் போகின்றது. அதுவும் மேலை நாடுகளில், தங்களின் வேலைக்கணதியாலும், சோம்பேறித்தனத்தாலும் குழந்தைகளை இயந்திரம் போல் பாவிக்கின்றார்கள்.
அவ்வளவு ஏன்? நம்மவர்களிடையே கூட சிலர் குழந்தைகளை பெல்ட் போட்டு காவும் கலாசாரம் ஆரம்பித்திருக்கின்றது. ஏதோ காய்கறி சாமான்களை தூக்குவது போல் தூக்குகிறார்கள். பிற்காலத்தில் பிள்ளைக்கு அம்மா, அப்பா என்ற பாசம் எவ்வாறு வரும்?
அன்று பாரதி, கிளியே! செல்வமே! என அடைமொழிகள் வைத்துப் பாடிய குழந்தைகள் இன்று பெற்றோர்களுக்கே பாரமாகிவிட்டது போல் தெரிகின்றது. கீழுள்ள சில மேலை நாட்டு உதாரணங்களைப் பாருங்கள்.
3 comments:
என்ன கொடுமை இது.... எத்னை பேர் பிள்ளையின்றி அலையிறாங்கள் தெரியுமா..?
ரொம்ப பாசக்கார பயலுக போல கிடக்கு
இந்தியர்கள்/தமிழர்கள் ஒன்றும் பெரிய பாசக்காரர்கள் இல்லை.மனிதத்தன்மை உலகில் பாரபட்சமில்லாமல் குறைந்து வருகிறது என்பதே கசப்பான உண்மை!
Post a Comment