என்ன நடக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாத நிலை தொடர்கிறது அது தான் ஆச்சரியமாகவும் இருக்கிறது. காரணம் தெரியாத நிலையில் தத்தளிப்பதால் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மைகள் ஆகுறோம். ஐம்புலன்கள் இருந்தும் காந்தி சொன்ன குரங்குகளாய் உருவெடுத்துள்ளோம்.
யாழ் நகரின் மையத்தில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பங்காவான பழைய பூங்காவான ( old park ) திட்டமிடப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்றது.தற்போது அங்கு நூற்றாண்;டு வயதைக் கொண்டாடிய பெருமளவிலான மரங்கள் வெட்டீ அகற்றப்பட் டுவிட்டன.எஞ்சியவற்றையும் சூறையாட முனைப்புக்காட்டப்ப டுவதாக ஊகிக்கப்படுகிறது.ஆங்கிலேயர்களது ஆட்சியின் கீழ் யாழ்குடா நாடு இருந்த காலப்பகுதியில் சுண்டுக்குழியில் உருவாக்கப்பட்டதே பழைய பூங்கா காவாகும். யாழ் மாவட்டத்தில் முதலாவது அரச அதிபரான பேர்சிவல் அட்லன் டையிட் பழைய பூங்காகாவின் இயற்கையை தொடர்ந்து பேணும் வகையில் அரச அதிபருக்கான விடுதி தவிர வேறு எந்தவொரு நிரந்தர கட்டடங்களையும் அங்கு அமைக்கத் தடை விதித்திருந்தார்.
1829 ஆம் ஆண்டில் ஒக்டோபர் முதலாம் திகதி ஆங்கிலேயரான இவர் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.பழைய பூங்காவின் இயற்கையினை இறுதிவரை நேசித்து வந்திருந்த அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதனை திறந்தும் விட்டிருந்தார்.ஆட்சி மாற்றங்கள் காரணமாக பழைய பூங்காவின் நிலை சர்சைக்குள்ளாகியது. அது கேந்திர நிலையமாக இருந்ததால் ஆட்சியாளர்கள் தங்கள் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தனர்.ஏன் இப்பவும் அந்த நிலை தான் தொடர்கிறது. எனினும் 1996 ஆம் ஆண்டு யாழ்குடா படையினர் கைப்பற்றியதிலிருந்து (சாட்டு போக்கு எங்களுக்கு கைவந்தது தானே?) கண்ணிவெடியைக் காரணம் காட்டி பொதுமக்கள் பாவனைக்குத் தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் முன்னைய அரசாங்க அதிபரினால் ஆடம்பர விடுதி ஒன்று கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கிருந்த விடுதி குண்டுத்தாக்குதலில் சேதமைந்து விட்டது என்ற காரணத்தை முன்வைத்துள்ளார்கள்.
அடுத்து தற்போது வடமாகாண ஆளுநருக்காக சுமார் 100 மில்லியன் செலவில் மாளிகை ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த நிர்மாணப் பணிகளுக்காக நூறு வயதைத் தாண்டிய மரங்கள் எல்லாத்தையும் வெட்டிச்சரித்து விட்டார்கள். இது அரசாங்க சொத்து என்ற வகையினாலும் , கண்டி வீதியோரமாக அமைந்துள்ளதாலும் அனைவரது கண்களிலும் படும்படியாக இருக்கிறதால் தானோ அதற்கு இந்த நிலை ஏற்பட்டது.
சர்ச்சையில் சங்கிலியன்………….
1620 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாண இராஐயத்தின் மீது படையெடுத்தனர். அந்தப் படையெடுப்பை அன்று யாழ்ப்பாண இராஐயத்தை ஆண்டு வந்த சங்கிலிய மன்னன் எதிர் கொண்டான் என்பது வரலாறு.
கி.பி 1519 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராஐயத்தின் அரசனாக முடி சூட்டிக்கொண்டான் சங்கிலியன். என்ன தான் சங்கிலியன் கொடுங்கோல் ஆட்சி செய்தாலும் போர்த்துக்கேயரை கடைசி வரை எதிர்த்து நின்றவன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே போர்த்துக்கேயருக்கு எதிர்ப்புத் தெரிவித்தான் அவர்களோடு தொடர்புடையவர்களைத் தண்டித்தான்.உண்மையா கவே சங்கிலியன் ஆளுமை மிக்கவன் அத்தோடு நாட்டுப்பற்றுக் கொண்ட வன்.போர்த்துக்கேயர் 1505 ஆம்ஆண்டே கோட்டை இராசதானிக்கு வந்திருந்த போதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அதற்கான முழுக் காரணமும் சங்கிலியன் தானாம்.அந்த வகையில் அவன் பாராட்டுக்குரியவன் தான் உண்மையிலே………
யாழ் முத்திரைச் சந்தியில் அமைந்திருக்கும் சிலையானது முதலாவது சங்கிலியனுடையது. ஆனால் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் இவன் அல்ல இவருக்குப் பின்னால் இன்னொரு சங்கிலியன் வருகிறான் அவன் சங்கிலி குமாரன் என்று அறியப்படுகிறார். 1972 ஆம் ஆண்டே முதன் முதலாக சங்கிலியன் சிலை நல்ல}ரில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல முறை சங்கிலியன் சிலை சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இந்திய சிற்பியினால் புதிதாக வடிவமைக்கப்பட்ட சங்கிலியன் என்ற சிலை பொன்னிறத்தில் திறந்து வைக்கப்பட்டது.
- முன்னர் இருந்த சிலை எங்கே?
- புதிய சிலையை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
- இந்தச் சிலை எத்தனையாம் சங்கிலியன்?(உருவ அமைப்பு)
- பழைய சிலையயைப் பாதுகாக்க நூதனசாலையில் வைக்கப்படாமைக்கான காரணம் என்ன?
மீண்டும் சங்கிலியன் சர்ச்சையில் சிக்கினால் தமிழ் மக்கள் சங்கிலியனுக்காக போராடுவார்களா?இல்லை வாழ்நாள் மௌனிகளாக இருந்து விடுவார்களா? எனது ஆதங்கமும் அது தான்!!
நல்லூரின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் கம்பீரமான முகப்புத் தோற்றத்துடன் அமைந்திருக்கும் இந்த வரலாற்றுச் சின்னம் “மந்திரி மனை என்றழைக்கப்படுகிறது. பருத்தித்துறை வீதியில் சட்ட நாதர் கோயிலுக்குச் சற்றுத் தெற்காக அமையப்பெற்றுள்ளது.இதன் கட்டட அமைப்பும் மரத்தினாலான சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலைமரபை பிரதிபலிக்கின்றன.இதன் வெளித் தோற்ற அமைப்பு ஒல்லாந்தரின் கலை அம்சத்தைக் குறிப்பிடுகின்றதாம். இந்த மனையில் பெரிய கிணறு உள்ளது. அந்தக் கிணற்றின் ஒரு பகுதி வெளியேயும் மற்றைய பகுதி மனைக்கு உள்ளேயும் கட்டப்பட்டுள்ளதாம். கருங்கல்லினால் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கிணற்றுக்கு இன்னொரு முக்கியத்துவம் இருக்கிறது. இக்கிணற்றுக்கும் யாழ்ப்பாண மன்னர்கால யமுனா ஏரிக்கும் இடையே சுரங்கப்பாதையி ருந்ததாகவும் சில காலங்களில் இக்கிணற்றறில் நீர்பெருக்கு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது இவை மூடுபட்டும் இடிந்த நிலையிலும் தோற்றமளிக்கிறது. பொக்கிஷமாக பேணப்படவேண்டியவை கவனிப்பாரற்று அழிந்தே போகிறது. பாதுகாப்பதற்கு பல வழிகள் இருந்தும் யாரும் முன்வருவதாக இல்லை. உலகில் உள்ள புராதனங்களைப் பாதுகாப்பதற்காகவே UNESCO அமைப்பு முன்வருகிறது. ஆனால் இது தமிழரின் பண்பாட்டு இடம் தானே!அது தானோ இந்த நிலை?
இனிவரும் எங்கள் பரம்பரைக்கு வரலாற்றைச் சொல்ல என்னத்தை ஊதாரணமாக காட்டப்போகிறோமோ தெரியவில்லை. எந்த ஒரு கலைஞராலும் இப்படி ஒரு கட்டடத்தை கட்ட முடியுமா?தெரியவில்லை.படிப்படியாக தன்னிலையை இழக்கிறது யாழ்ப்பாணம்.
சங்கிலியன் தோப்பு கல்தோரண வாசல் கரைகிறது……….
நீண்ட காலமாக கவனிப்பாரற்று கிடக்கிறது இக்கட்டடத்தொகுதி. முத்திரைச்சந்தைக்கு வடக்கே கொஞ்சத் தூரத்தில் இத்தோரண வாசல் அமைந்துள்ளது. இதனைச் சிலர் சங்கிலிய மன்னனின் அரச மாளிகை வாசல் எனவும் வேறு சிலர் யாழ்ப்பாண மக்களின் அடிமைவாழ்வுச் சின்னம் என்று கூறுகின்றனர். இக்கட்டடமும் அதன் கலை அம்சமும் ஒல்லாந்தர் காலத்துக்குரியவை. இதன் நிலையும் அதோ கதி தான்.
யாரும் தேடா யமுனா ஏரி…..
யமுனா ஏரி நல்லூர் இராசதானி காலத்து மிகமுக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். சிங்கை பரராசசேகரன் என்பவன் தனது சமய ஆர்வத்தினால் தானும் குடிமக்களும் நன்மை பெற வேண்;டுமென்று எண்ணி 1478 ஆம் ஆண்டளவில் யமுனா ஆற்றில் இருந்து காவடிகளில் புனித நீரைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததால் இது இப் பெயரைப் பெற்றுள்ளது. “ப "னா வடிவில் அமைக்கப்பட்டுள்ள யமுனா ஏரி தமிழரின் தொழில்நுட்ப திறனை எடுத்துக்காட்டுகிறது.
இப்படியான பல கட்டடங்கள் யாழ் இராசதானியின் வரலாற்றைப்பறை சாற்றுகின்ற வேளை அவை வெகுவிரைவில் காணாமல்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். வரலாறுகளைச் சொல்லத்தான் தடயங்களைப் பாதுகாக்கவேண்டும். இங்கு நிலை தலை கீழ் ஆமை தான் வந்த வழியை அழிப்பது போல நாங்கள் மாறிவிட்டோமா?சரித்திரம் படைத்த எங்கள் செயல் புகழ் இன்று சரியத்தொடங்கி விட்டன. எங்கள் பண்பாடு பழைமையானது பாதுகாப்பது எங்கள் கடமை.
12 comments:
பழைய பூங்கா இப்போ இப்பிடி ஆகிவிட்டதா? பழைய பூங்காவிலும் ஏதோ மாளிகை வரப்போகுதுன்னு சொன்னாங்க..ஆளுநர் மாளிகைதானா!
சங்கிலியன் தோப்பில்தான் சர்ச்சைக்குள்ளான நட்சத்திர ஹோட்டல் அமையப்போவதாகச் சிலர் சொல்கிறார்கள்!
எல்லா அடையாளச் சின்னங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன!
ஆம் .மாளிகை கட்டபட்டுவிட்டது .
//எல்லா அடையாளச் சின்னங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன!//
புரிந்து கொண்டால் நல்லது
ஆதரவுக்கு நன்றி
//இப்படியான பல கட்டடங்கள் யாழ் இராசதானியின் வரலாற்றைப்பறை சாற்றுகின்ற வேளை அவை வெகுவிரைவில் காணாமல்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பது தான் கவலைக்குரிய விடயமாகும்//
இது தொடரும்!
ஏற்கெனவே எரிக்கப்பட்ட யாழ்நூலகத்தை அப்படியே வைத்துக்கொண்டு புதிதாக வேறு கட்டியிருக்கவேண்டும். ஆனால் வரலாற்றையும் சேர்த்து பூசி மெழுகிவிட்டர்கள்!
சரியாகத்தான் சொல்லியிருக்கிறிர்கள் .எங்களின் தலைவிதியை எங்கு முறையிடுவது ?
பார்வையாளர்களாக ,மவுனிகளாக மட்டும் தான் எங்களால் இருக்க முடியும் ((
ம்ம்..... வாழ் நாள் முழுவதுமாக ....
அவசியமான பதிவு.
நாம் கிட்டதட்ட அடிமைகளே :(
Subscribe via email gadget இணைக்கலாமே..
ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்திருக்கிறீங்க.
>முன்னர் இருந்த சிலை எங்கே?
புதிய சிலையை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
இந்தச் சிலை எத்தனையாம் சங்கிலியன்?(உருவ அமைப்பு)
பழைய சிலையயைப் பாதுகாக்க நூதனசாலையில் வைக்கப்படாமைக்கான காரணம் என்ன?
---------
நல்ல கேள்விகள் .
இன்னும் ரொம்பவே நடக்க இருக்குதுங்க..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
இளக்கும். ஈழக்க வேண்டும். தமிழன் எங்கு இருக்கிறான். யாழ்ப்பாணம் தனித்துவத்தை இழக்காமல் இருக்க ? தமிழன் என்ற ஒரு இனத்தையே யாழ்ப்பாண தமிழன் அளித்து கொண்டு இருக்கிறான் இப்போழுது colobmo இல், அத்துடன் யாழ்ப்பாணத்ததில் இப்போழுது எங்கு தமிழன் வாழ்கிறான் முழுவதும் வெளிநாட்டு மோகம் வெளிநாட்டு மக்கள் வாழ்கிறார்கள். இப்போழுது யாழ்ப்பாணத்தில் தமிழன் வாழ வளி இல்லை.
Post a Comment