“என் எழுத்துக்கு வாழ்வு தந்தது இந்தக்களம் இன்றுவரை தெரியாமல் இருந்தேன்”, "வீட்ட போனதும் இதே வேலைதான்” இவையெல்லாம் வலைபதிவர் ஒன்று கூடலில் ஒலித்த குரல்கள். இவை ஏதோ ஒன்றை எதிர் பார்ப்பது போல் இருக்கின்றது. புதிய அனுபவமாக இருந்தாலும் எதிர்பார்ப்புகள் பலமாகவும் பலவிதமாகவும் இருந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வலைப்பதிவர் ஒன்றுகூடல் இடம் பெற்றது. இந்த நிகழ்வு இலங்கை வலைப்பதிவர்களுக்காக வரலாற்றிலே முதன் முறையாக நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். இந்த வலைப்பதிவின் ஊடாக ஒவ்வொரு தனி மனிதனும் தனது சுய கருத்தை எளிய முறையில் சுதந்திரமாகவும் வெளிப்படுத்துவதற்கு களம் அமைத்து கொடுக்கிறது. எழுத்து துறையில் ஆர்வமுள்ளவர்கட்கு இந்த வலைப்பதிவானது பல வழிகளில் உதவியாக உள்ளது. எவ்வாறு எனின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பிடிப்பது தொடர்பாடல் ஆகும். வலைப்பதிவின் ஊடாக திரையில் மறைந்திருந்து எழுதும் எத்தனையோ எழுத்தார்வமுள்ளவர்களை எழுத்துருவிலே இணைக்கும் பாலமாகவும் உள்ளது. இது அவர்கட்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.ஒவ்வொருத்தரும் தங்களுடைய கட்டுரைகள் கவிதைகள் பத்திரிகைகளில் வரவெண்டும் என ஆசைப்படுபவார்கள். ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு நிராகரிக்கப் பட்டவர்களைக்கூட தன் பக்கம் ஈர்த்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த வலைப்பதிவானது ஆரம்பிக்கப்பட்டு கடந்த 23ஆம் திகதி 10வருடங்கள் நிறைவுற்ற நிலையிலும் எத்தனை பேருக்கு வலைப்பதிவு என்றால் என்ன என்பது தெரிந்திருப்பது கேள்விக்குறிதான். இலங்கையில் வலைப்பதிவின் தாக்கமானது மிகவும் அரிதாக உள்ளது.

வலைப்பதிவின் முக்கியத்துவம் துல்லியமாக எடுத்து கூறப்பட்டது ஒவ்வொருத்தரும் தங்களுக்கான வலைப்பதிவை எவ்வாறு பெற்றுக் கொள்வது தங்களுடைய பதிவுகளை எவ்வாறு இணைத்து கொள்வது என்பது தொடர்பாக சரியான விளக்கமளிக்கப்பட்டது. அதை விட முக்கியமானது புலமைச்சொத்து தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதுதொடர்பான சட்டங்கள் அதாவது ஒருவருக்கு சொந்தமான ஆக்கங்களை அவரின் அனுமதி இல்லாது எடுத்து வலைப்பதிவுகளில் பதிவை மேற்கொள்ள முடியாது இது குற்றமாகும். வேறு எந்த இணையத்தளத்திலிருந்து பெற்ற தகவல்களைக் வெளியிட முடியாது.ஒருவருக்கு சொந்தமானதைத் தவிர வேறு எதையும் வெளியிட முடியாது. ஆக்க உரிமையாளரின் அனுமதிஃ சான்று பத்திரம் கிடைத்தால் மாத்திரம் வெளியிட முடியும். இது அழுத்திக் கூறப்பட்ட விளக்கங்களில் ஒன்றாகும்.

எதுவாக இருந்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கும் ஈடு கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. ஆகவே வலைப்பதிவுகளை மேற் கொள்பவர்கள் தங்களுடைய கடவுச் சீட்டுகள் மற்றும் இரகசிய குறியீடுகளை கவனமான முறையில் கையாள வேண்டிய கடப்பாடு உள்ளது. ஏனென்றால் ஆரம்ப காலங்களில் வலைப்பதிவானது அன்றாட நாட்குறிப்பேடு போலவே பேணப்பட்டு வந்தது.

அன்றாட வாழ்வில் கிடைக்கும் அனுபவங்களையே பகிர்ந்து கொண்டார்கள்.காலப் போக்கில் தொழில்நுட்ப மாற்றத்தால் ஆய்வுகள்இகட்டுரைகளை வலைப்பதிவில் எழுதினார்கள்.தொழில்நுட்ப வளர்
சியால் ஒருவருடைய ,ரகசியக்குறியீட்டைக் கூட களவாடக் கூடிய நிலைமை காணப்படுகிறது.இவ்வாறான சூழ்நிலைகளில் வலைப்பதிவர் விழிப்புடன் செயல்ப்பட வேண்டும் என விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது.இவ்வாறே ஒருவருடைய புலமைச் சொத்தை இன்னொருவருடையதாகஇலகுவாகமாற்றிவிடலாம். எல்லாம் கடந்துவந்த வலைப்பதிவானது எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முதலிடத்தை பிடிக்கிறது . எங்களுடைய எந்த செயல்பாடுகளிலும்; சினிமா பின்னிப் பிணைந்துள்ளது. சினிமா இல்லா விட்டால் அனைத்தும் ஸ்தம்பிதமாகும் நிலைகூட உருவாகலாம்.ஒரு தகவலை நாம் பரிமாறுவதன் நோக்கம் ஒன்று தகவலைப் வெளிப்படுத்துவதுடன் எமது மொழியையும் வளப்படுத்துகிறோம்.ஆனால் ஒருநோக்கம் தான் நிறைவேற்றப்படுகிறது.மொழியை வளப்படுத்தல் என்பது பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.

எமது எழுத்துத்துறை பேச்சு முறை அனைத்து நடவடிக்கைகளிலும் இந்திய கலாச்சாரமும் சினிமாவுத் ஒன்றியுள்ளது ,தனால்எல்லோரும் அதற்க்கு இயல்பாகவே ஈர்க்கப்பட்டு விடுகின்றார்கள் தமிழையே பல முறைகளில் எழுதுகிறாரகள்.
இந்திய சினிமாவை வைத்தே காலத்தை ஓட்டுமளவுக்கு அது எங்களை ஆக்கிரமித்துள்ளது.வெளிப்பாடே ஒவ்வெருத்தரின் வலைப்பதிவிலும் இ
ந்திய மொழி நடைதான் பின்பற்றப்படுகினறது . அது தமிழாக இருந்தாலும் சொற்க்கள் பிரயேகாத்தில் வேறுபாடு இருக்கின்றது .இதனால் விளங்கிக் கொள்வது கடினமாக உள்ளது இந்தப்பாணியை தவிர்ப்பது நல்லது.காரணம் எஙகள் மொழியை நாங்கள் பயன்படுத்த வேண்டும் எங்களின் கருத்தை மற்றவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும் அப்போது தான் உறவுகளை சுமூகமாகப் பேணமுடியும்.

வலைப்பதிவில் மற்றய ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளுடனான பதிவில்
இவ்வாறான பிரச்சினைகள் எழுவதில்லை காரணம் அவரகள் தங்களுக்குறிய பாணியையே பின்பற்றுகின்றார்கள்.இங்குவேறுபடுவதற்க்கு ஒன்றும் இல்லை ஊடகங்கள்கூட இந்திய முறையிலான எழுத்துப் பேச்சு முறைகளையே பின்பற்றுகின்றனர் நாம் எல்லோரும் அந்தப்பானியைப் பின்பற்றுவதற்க்கு ,துதான் காரணமாக அமைகின்றது எல்லா செயற்ப்பாடுகளும் சினிமாவையே மைய்யப்படுத்துகின்றது ,ல்லாவிடின் மக்களின் ஆர்வம் திசை திருப்பப்படுகின்றது ,தற்க்காகவே ,வ்வாறான யுக்திகளை பின்பற்றுகின்றார்கள் ,து மாற்றப்பட வேண்டும்.

ஒவ்வொரு வலைப்பதிவுகளும் தங்களை அறிமுகப்படுத்துவதற்க்கு எங்கள் சொந்த மொழியுடனான பாணியை பின்பற்றுவதுதான் மிகவும் நல்லது என இலங்கைப் பதிவர் ஒன்று கூடலில் அழுத்திக்கூறப்பட்டது. வலப்பதிவினூடாக சிறந்த படைப்புக்களை வெளிக்கொண்டுவருவதன்மூலம் சர்வதேச ரீதயில் நல்லதொரு அங்கிகாரத்தையும் பெறமுடியும் ‘கூகுல்’வலயமைப்பினூடாக வலைப்பதிவினை சிறப்பாக மேற்க்கொள்ளும்போது இதனிடமிருந்துவெளிநாட்டு அந்நிய செலாவனியையும் பெறக்கூடியவறு வாய்புக்களை ஏற்ப்படுத்திக் கொடுக்கின்றது .

சாதனைகள் பல வழிகளில் மேற்க்கொள்ளமுடியும் வலைப்பதிவினூடாக சாதிப்பபதற்க்கு நிறைய வாய்புக்களை ஏற்ப்படுத்தி தருகின்றது சாதிப்பதற்க்கு முன்னால் வலைப்பதிவினைப்பற்றிய அறிவினைக் கொண்டிருக்க வேண்டும்.

எல்லோரும் ஆங்கிலத்தில் மோகம் கொண்டிருப்பதால் தமிழினை சரியாகக் கவனிப்பது இல்லை வளர்ந்து வரும் சந்ததிகளுக்கு சரியான முறையில் தமிழைக் கற்ப்பதிலலை இதனால் அவர்கள் தமழ் செற்க்களை கூட ஆங்கிலத்தில் டைப் செய்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய சூழ் நலையும் காணப்படுகின்றது . இதனால் சொற்ப்பிழைகள் விடப்படுகின்றது இவ்வாறான செயற்ப்பாடுகளால் வலைப்பதிவின் தரமானது குறைவடைவதற்க்கும் சந்தர்ப்பமுள்ளது வலைப்பதிவு விமர்சிக்கப்படுவதற்க்கும் இதுவும் ஒரு காரணமாகும் .இதனை தவிப்பதற்க்கு வலைப்பதிவில் நுழைய விரும்பும் ஆர்வலர்கள் மிகவும் கவனமெடுத்து செயற்ப்பட வேண்டியுள்ளது .