இந்தியர்கள் நடத்தி வரும் சலூன்கள் அனைத்தையும் மூடும்படி மலேசியாவில் உள்ள பெனாங் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது .
இதனால் அங்கு வசித்து வரும் இந்திய முடிதிருத்தும் தொழிலாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர் .
மலேசிய முழுவதும் மொத்தம் 2000 சலூன்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன .
இவற்றில் பெனாங் மாகாணத்தில் மட்டும் 700 கடைகள் உள்ளன .முடி திருத்தும் தொழிலில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக பிற நாடுகளில் இருந்து வந்து சலூன் நடத்தி வருவோரின் பணி அனுமதியை புதுப்பித்துதர பெனாங் மாகாண அரசு மறுத்து வருகிறது .அவர்களின் கடைகளை மூடும் படியும் உத்தரவிட்டுள்ளது .
இதனால் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சலூன்கள் மூடப்பட்டுள்ளன .
இதே போன்ற பிரச்சனை 2004 இல் வந்தது .என்றாலும் அப்போதைய தமிழ் அமைச்சர் டத்தோ எஸ் சாமிவேலுவால் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது .
பெனாங் மாகாண இந்திய முடிதிருத்துவோர் சங்க கமிட்டி உறுப்பினர் செல்வகுமாரன் கூறுகையில்" இந்த விவகாரம் எங்கள் வாழ்க்கைக்கு மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது .மனித வள மேம்பாட்டு அமைச்சு எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம் என்றார். "
மனிதர்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சினையாகவே உள்ளது .சலூன்கள் நடத்துவதிலும் பிரச்சனையா?சாதாரணமான விஷயம் கூட வெளிநாடு என்று பார்க்கும் போது இயல்பாகவே பெரிய விசயமாக மாறிவிடுகிறது .......இதுதான் வெளிநாட்டு காசின் வேலை என்பார்களோ !!!!!
0 comments:
Post a Comment