ஒருநாள் மாலை நேரமிருக்கும் நான் ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது அவர்கள் டி வி தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். பார்த்தேன் டி வியில் மெகா சீரியல் சீரியஸ்ஸாக போய்க்கொண்டிருந்தது. ஒரு நிமிடத்துக்குள் எனக்குத் தேனீர் தந்து விட்டு மீண்டும் உட்கார்ந்து விட்டார்கள். அப்பொழுது அவர்களுடைய மகள் ரியூசனுக்குச் சென்றிருந்தார். நான் வெளிக்கிட்ட போது அவளும் வந்தாள். வரும்போதே “அம்மா இண்டைக்கு கோலங்கள்ல என்னம்மா நடந்தது? ஆதியைப் பொலிஸ் பிடிச்சிட்டுதா?” “வாத்தி இண்டைக்கு வேளைக்கு விடும் எண்டு பார்த்தன், அது இண்டைக்குத் தான் ஏதோ அமளியாப் படிப்பிக்குது. சீ… இண்டைக்கு கோலங்கள் மிஸ் பண்ண்pயாச்சு, இனி பின்னேரம் அந்த வாத்தி கிளாஸ் வைச்சாப் போறேல” என்றாள். அவள் ஒன்பதாம் ஆண்டுதான் படிக்கிறாள் என்பது எனக்கு மேலும் சிரிப்பை வரவழைத்தது. அந்தக் கணம் உணர்ந்தேன் இந்த நாடகங்கள் எவ்வளவு போதை ஊட்டுபனவாக இருக்கின்றதே என்று கஞ்சா , ஹெரோயினை விட மேசமானவை.
நாடகங்கள் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடுவதன் நோக்கம் சமூக சீர்கேடுகளை குறைப்பதும் சமூகத்தை நல்வழிப்படுத்த தீயவற்றைக்கழைவது தான். ஆனால் இன்று அப்படியா? இப்படியான குறிக்கோள் எந்தவொரு நாடகத்திலும் காணப்படவில்லை. இன்றுவரை இன்றைய மெகா சீரியல்கள் 4மூகக் கட்டுக்கோப்புக்களை நடிப்பு வேடத்தால் அவிழ்த்து இதைப்புரியாது திணறுகின்றது இன்றைய சமூகம். இந்த நாடகங்களில் யார் தான் மோகம் கொள்ளவில்லை. சிறியவர்கள் முதல் வயோதிபவர்கள் வரை இதுதான் கதை. அண்மையில் ஊடக நிறுவனம் ஒன்றில் கூட தங்கள் வேலைகளை முடித்த பின் ஊழியர்கள் சீரியல்கள் பற்றி அலசி ஆராய்ந்ததாக நண்பி ஒருவர் சிரித்தபடி சொன்னார்.
மெகா சீரியல் உங்கள் வாழ்க்கையை வளம் படுத்தாது உள்களைவ hழ விடாமல் செய்து விடுகின்றது. நாடகங்கள் மீதுள்ள மோகத்தைக் குறைப்பதற்கான வழி முதலில் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும். உடனடியாக மாற முடியாவிட்டால் தொடர் நாடகங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து குறுநாடகங்கள் பாருங்கள். பெற்றோர் நாடகங்களைப்பார்ப்பதால் வீட்டில் உள்ள சிறுவர்களும் சேர்ந்து உட்கார்வார்கள். அவர்களைப் “போய்ப் படி என்று விரட்டாதீர்கள்” முதலில் நீங்கள் பார்ப்பதைக் குறையுங்கள். சிறுவர்களின் படிப்பும் நாடக வெறியால் பாதிப்படைகின்றது. பெரியவர்கள் தவிர்க்கும் போது சிறியவர்களும் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். நடிப்பு, நாடகத்தைப் பார்ப்பதை வெறும் பொழுது போக்காகவே கருதுங்கள்.
0 comments:
Post a Comment