இந்த நூற்றாண்டில் ஒரு பெண்ணின் மரணம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்ததென்றால் அது டயானாவின் மறைவு தான். இங்கிலாந்து இளவரசர் சார்ல்சைக் காதல் திருமணம் செய்த அழகு தேவதை.விதியின் விளையாட்டால் விவாரத்துப் பெற்றவர்.கோடீஸ்வரர் ஒருவரை மணக்க இருந்த போது கார் விபத்தில் பலியானார்.



டயானா இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு தூரத்து உறவினர்.அந்த முறையில் அவர் அடிக்கடி அரண்மனைக்கு வந்து போவதுண்டு.அவரிடம் பட்டத்து இளவரசரான சால்ஸ் காதல் கொண்டார்.ஒரு நாள் தன் காதலை வெளிப்படுத்தினார்.அவரை மணக்க டயானாவும் சம்மதித்தார். 1981 ஐPலை 29ம் திகதி டயானா சார்ல்ஸ் திருமணம் சிறப்பாக நடந்தது. சில ஆண்டுகளின் பின்னர்இ வில்லியம்இஹாரி ஆகிய இரு ஆண்குழந்தைகளுக்கு தாயானார். ஒரு நாள் பத்திரிகைகளில் வெளியான செய்தி டயானாவை திடுக்கிடச் செய்தது.சார்ஸ்சுக்கு திருமணம் நடப்பதற்கு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே கமீலா என்ற பெண்ணுடன் தொடர்பு உண்டென்றும் திருமணத்திற்குப் பிறகும் அவர்களுடைய காதல் நீடிக்கிறது என்றும் பத்திரிகைகள் கூறின.


டயானா-சாள்ஸ் வாழ்கையில் புயல் வீசத் தொடங்கியது.கமீலாவுடன் தனக்கு காதல் உண்டென்பதை சாள்ஸ் ஒப்புக் கொண்டாலும் அந்தக் காதலை முறித்துக் கொள்ள முன் வரவில்லை. டயானா போன்ற அழகியல்ல கமீலா.ஆனாலும் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி அவளிடம் இருந்தது.இத்தனைக்கும் அவள் கன்னிப் பெண் அல்ல.ராணியின் உறவினரான பார்க்கர் பவுல்ஸ் என்பவரின் மனைவி. சாள்ஸ{ம் கமீலாவும் டெலிபோனில் காதல் ரசம் சொட்டப் பேசிக் கொண்டதைப் பத்திரிகைகள் ரகசியமாக “ரக்கோட்” செய்து வெளியிட்டன.இனி சாள்ஸ் உடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தார்.


1992 டிசம்பர் 9ம் திகதி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். “வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் பிரிந்து வாழ்வதென்று முடிவு செய்திருக்கிறார்கள்.பக்கிங்ஹாம் அரண்மனை இந்தச் செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. இளவரசரும் இளவரசியும் விவாகரத்து செய்து கொள்வதாக இல்லை.ஆகவே அவர்களுடைய சட்டப+ர்வமான அந்தஸ்து அப்படியே இருக்கும்.குழந்தைகளை வளர்ப்பதில் இருவரும் மனப்ப+ர்வமாகச் சேர்ந்து ஈடுபடுவார்கள்.பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கு கொள்வார்கள்.” இந்த அறிவிப்புக்குப் பின் இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளின் பின்னர் டயானா குறிப்பிட்ட சில ஆண்களிடம் பழகுவது பற்றி பத்திரிகைகள் ‘கிசு கிசு’ வெளியிட்டன.


1996 ஆகஸ்ட் 25ம் திகதி டயானாவும் சாள்ஸ{ம் அதிகாரப் ப+ர்வமான விவாகரத்துப் பெற்றனர். டோடி என்ற 41 வயது எகிப்திய கோடீஸ்வரருக்கும் டயானாவுக்கும் காதல் ஏற்பட்டது.இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தனர். 1996 ஆகஸ்ட் 31ம் திகதி பிரான்ஸ் தலை நகரான பாரீஸ் நகரில் உள்ள ஹோட்டலில் டயானாவும் டோடியும் தங்கியிருந்தனர்.ஹோட்டலின் ஒரு நாள் கட்டணம் மூன்று லட்சம் ரூபாய்.இருவரும் காரில் செல்லும் போது படம் எடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக டயானாவும் டோடியும் மின்னல் வேகத்தில் பறந்தனர்.பத்திரிகையாளர்களும் விடாது துரத்தினர். புகழ் பெற்ற ஈபிள் டவருக்கு அருகே ஒரு சுரங்கப் பாதையில் டயானாவின் கார் வேகமாக நுழைந்தது.எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதையின் கொன்கிறீட் தூண் மீது கார் மோதி நொறுங்கியது.


டயானா படுகாயமடைந்து நினைவு இழந்தார்.டோடியும் கார் ரைவரும் அதே இடத்தில் இறந்து போனார்கள். காரின் சிதைந்த பாகங்களை வெட்டித் தான் டயானாவை வெளியே எடுக்கமுடிந்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது டயானா உயிருடன் இருந்தார்.இவரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் பாடுபட்டனர்.ஆனாலும் எல்லாவற்றையும் மீறிக் கொண்டு டயானாவின் இறுதி மூச்சு நின்று விட்டது. டயானா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினம் தினம் குவியும் ப+ங்கொத்துக்களும் மலர் வளையங்களும் உலக மக்களின் மனதில் டயானா எத்தகைய இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்த்துகின்றது. ;