கடந்த பத்தாண்டுகளாக ஆண்டுக்கு 400 தொன் முதல் 500 தொன் தங்கம் விற்பனை செய்து வந்த ஐரோப்பிய மத்திய வங்கி இந்த ஆண்டு விற்பனை செய்யவுள்ள தங்கத்தின் அளவைக் குறைத்துள்ளது. இதனால் இந்த ஆண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்து சீனா 450 தொன் தங்கமும், இந்தியா 200 தொன் தங்கமும், ரஷ்யா 120 தொன் தங்கமும், விலைக்கு வாங்கின. அமெரிக்க அரசு 8133 தொன் தங்கமும், யூரோ சோன் 10 800 தொன் தங்கமும், சர்வதேச நிதி அமைப்பு 3000 தொன் தங்கமும் இருப்பு வைத்துள்ளன. உலகளவில் உள்ள பல்வேறு நாட்டு அரசுகளும் இருப்பு வைத்துள்ள மொத்த தங்கத்தின் அளவு 30 ஆயிரம் தொன்னை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு தங்கம் தான் அதிக தகுதி வாய்ந்த சொத்தாக கருதப்படும் நிலை உருவாகியுள்ளது. பொருளாதார மறுசீரமைப்புக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளது. முதலீட்டிற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி அதிகளவு தங்கம் இருப்பு வைத்திருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் மிக குறைந்த அளவு தங்கமே உள்ளன. ஆசிய நாடுகளிடம் மொத்தம் 2சதவீதம் தங்கமே இருப்பு உள்ளது.ஆசிய மத்திய வங்கி தன்னிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பை இன்னும் ஒரு சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டுமானால் 1000 தொன் தங்கம் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இப்ப புரிகின்றதா தங்கத்தின் மதிப்பு. உங்களை யாராவது தங்கமான பிள்ளை என்றால் சந்தோஷப்படுங்கள் இன்றிலிருந்தாவது……
3 comments:
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அதன் தரத்தினில் குறைவதுண்டோ?
தங்கமான பிள்ளை கிடைக்க கொடுத்து வைச்சிருக்கோணும்.
தாங்கள் தங்கமோ?
Post a Comment