கடந்த வாரத்தில் எல்லா ஊடகங்களிலும் இதைப்பற்றித் தான் கதை “பிரின்சஸ் கிரிசான்ரா”. வியப்புடன் சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது. இந்தக் கப்பல் மக்கள் பார்வைக்காக காலிமுகத்திடலில் தரிக்கப்படும் என செய்தி கிடைத்ததும் தாமதம் நான் பார்ப்பதற்கு வெளிக்கிட்டேன். 11.30 போல காலி முகத்திடலில் நின்றேன். ஒரே சனக்கூட்டமாக இருந்தது. எல்லோருடைய கண்களும் கடலுக்குள் தான் சென்றது. எனக்கு உடனே விளங்கி விட்டது. காத்துக்கொண்டு நின்றேன். எல்லோரும் பரபரத்தார்கள். மெதுவாக ‘பிரின்சஸ் கிரிசான்ரா’ நகர்ந்து வந்து கொண்டிருந்தது. ஒரு கணம் திகைச்சுப் போனேன். எத்தனையோ கமராக்கள் படம் பிடித்தன. கிரிசான்ராவுக்கு முன் ஆறேழு டோறாப் படகுகள் வட்டம் போட்டுக் கொண்டும் சாகசங்களைக் காட்டிக் கொண்டிடும் இருந்தன. தரையில் இருந்து பார்க்கக் கூடிய மாதிரி கப்பல் தரிக்கப்பட்டது. (கடலிலும் தரையிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது).
அக்கப்பலினுள் கார் தரிக்கக் கூடிய அளவு இடமுள்ளதாகவும் சுரங்கம் போல உள் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு கூடி நின்றவர்கள் கதைத்துக் கொண்டார்கள். சகோதர மொழி தெலைக்காட்சிகளில் அவ் உள் கட்டமைப்பு காட்டப்பட்டதாம். இனி இந்தக் கப்பலை காலிக்கு கொண்டு சென்று ரிக்கட் மூலம் மக்களின் பார்வைக்காக விடப்படப் போகுதாம். என்றும் பேச்சு அடிபட்டது.
“பிரின்சஸ் கிரிசான்ரா” ஆசிய நாடொன்றின் கடற்பரப்பில் வைத்தே மூன்று வாரங்களுக்கு முதல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பின்னரே கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது. இந்தக் கப்பலில் ஹெலியை தரையிறக்க முடியும். 90 மீற்றர் நீளமும் 16 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலினுள் 5000மெற்றிக் தொன் எடையுள்ள பொருட்களை ஏற்ற முடியுமாம். (நான் ஒன்றும் அளந்து பாக்கல சம்பந்தப்பட்டவர்கள் சொன்னதைத்தான் சொல்றன்)
இவ்வளவு தான். நீங்கள் பார்தனீங்களோ! BMICH ல கொண்டுவந்து வைப்பினமோ?
0 comments:
Post a Comment