நான் அண்மைக்காலத்தில் பார்த்து, வாசித்த இரண்டு செய்தி இணையங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். (இது விளம்பரம் அல்ல)
ஒன்று வாரணம், இன்னொன்று வணக்கம். இரண்டினதும் ஆங்கில தொடக்க எழுத்து V (Victory). எனவே இணையங்களும் வெற்றி நடை பேர்டும் போல் தெரிகின்றது.
வாரணம் டொட் கொம்
செய்திகள், விளையாட்டு, சினிமா, நிகழ்வுகள், வீடியோ, படத்தொகுப்பு என வகை பிரிக்கப்பட்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன. நாம் பிற தளங்களில் வாசித்த செய்திகள் மட்டுமல்லாது, எந்த செய்தித் தளங்களிலும் வெளியாகத செய்திகளையும் முதற் தடவையாக இங்கு அறியக் கூடியதாக உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு சார்ந்த செய்திகள். மக்களின் புனர்வாழ்வுகள், அபிவிருத்திகள் தொடர்பான செய்திகள் அதிகளவில் இடம்பிடிக்கின்றன.
சினிமா, விளையாட்டு இரண்டிலும் பிற தமிழ்த் தளங்களில் காணப்படும் செய்திகளை விட நிச்சயம் அதிகளவிலான செய்திகள் தினந்தோறும் வெளியாகும். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் வாரணம் சினிமாப் பகுதியை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தளத்திற்கே உரிய விசேட அம்சம் என்னவெனில், அது நிகழ்வுகள். இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்வுகள் உடனுக்குடன் வெளியாகின்றது.
வணக்கம் டொட் கொம்
மேலே வாரணம் இணையத்திற்கு கூறிய அனைத்து விடயங்களும் இதற்கும் பொருந்தும். அதனால் ரிப்பீட் அடிக்க விரும்பவில்லை. மேலதிகமாக இணையக்கோப்பு, சின்னஞ்சிறு விளம்பரங்கள், இசை, திருமண சேவை என்பனவும் உண்டும்
இணையங்கள் இரண்டும், புதிதாக இணைய வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. எனவே குறை, நிறைகளும் இருக்கலாம். நான் வாசித்த இந்தத் தளங்களை விரும்பினால் நீங்களும் ஒரு முறை வாசியுங்கள்.
3 comments:
நீங்கள் தமிழ் இணையதளங்களை அவ்வளவாக படிப்பதில்லை போல தோன்றுகிறது இதை படிக்கும் போது.அப்படி படிப்பவராக இருந்தால் இது வெறும் விளம்பரத்திற்காக எழுதப்பட்டது என்றே சொல்லவேண்டும்.ஏனென்றால் இந்த தளங்களிலுள்ள அனைத்து செய்திகளும் சுடப்பட்டவை(சினிமா உட்பட)....அனைத்துமே அரச பழசான செய்திகள் தான்.
புதிய தளம் நன்றாய் உள்ளது. வாழ்த்துக்கள்.
அன்புடன்
மாறனி
தகவலுக்கு நன்றி.
Post a Comment