“வெற்றியை நோக்கித்தான் வாழ்க்கை நகர வேண்டும்” “வெற்றி தான் வாழ்க்கை” என்றெல்லாம் பல பேர் பல மாதிரி அட்வைஸ் பண்ணுவாங்கள். நானும் பல தடவை கேட்டிருக்கிறேன். நீங்கள் எத்தனையோ பேர் கேட்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கூட மாட்டியிருப்பீர்கள்.

இப்ப எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது.

நீண்ட காலமாக என்னோடே படிக்கும் நண்பரின் ஞாபகம் வருகிறது. நான் அட்வைஸ் பண்ணப் போறதில்லை. அப்பப்ப கொஞ்சம் சொல்லுவன். அது கூட சிலருக்கு தாங்க முடியாம இருக்கு…. நான் படிப்பு விஷயத்தில மட்டும் கொஞ்சம் சொல்லுவன். என்னுடைய நண்பர் படிப்பு விஷயத்தில அலட்சியமாக இருப்பார். நான் நெடுகலுமே அதைப்படி, இதைப்படி என காதுக்குள்ள கூவிக் கொண்டே இருப்பேன். அவனோ அதைக் கேட்பதாக இல்லை. “விரும்பினா நீ படி, நான் எனக்கு தேவையானதைத் தான் செய்ய முடியும். எல்லாத்துக்கும் உன்னைப் போல அவாப்பட முடியாது.” இப்படிப் பேச்செல்லாம் வாங்கியிருக்கன்.

இதெல்லாம் ஏன்?..............

வாழ்க்கை, வெற்றி, இலக்கு என்றெல்லாம் அடுக்கும் வார்த்தைகளுக்காகத்தான். உண்மையில் வெற்றி தோல்வியை நாங்கள் தான் உருவாக்கியிருக்கிறோம். கிடைச்சால் ஓ.கே இல்லாட்டி அப்சற் தான். ஆராய்ந்து பார்த்தால் வேறு பட்ட முடிவு தான் பதிலாகிறது. வெற்றி தான் வாழ்க்கை என்றால் இவ்வளவு சாதிக்கும் மனித இனத்துக்கு மரணம் ஏது?.. தோல்வி தான் வாழ்க்கை என்றால் மூடிய இமைகள் திறப்பது ஏன்?.... இரண்டும் நிகழ்வது தான் வாழ்க்கை.
வெற்றியைத் தீர்மானிப்பது இலக்கா? முயற்சியா? என்றால, பதில் அவரவர் மனோவலிமையைப் பொறுத்தது. வெற்றி என்பது எமது நிழல் போல. அதை முன் நிறுத்துவது அவரவர் கெட்டித்தனத்தில் தான் தங்கியுள்ளது. அதைப் பிடிக்க முயன்றால் தோல்வி தான் நிச்சயம்.

அடுத்த முக்கியமான கட்டம் எமது இலக்குக்கு ஏற்ற மாதிரி பாதையை சீர்ப்படுத்த வேண்டும். சில வேளைகளில் இலக்கும் தவறும் சூழ்நிலை வரும். அது விதியோ என்னவோ தெரியல…. நான் விதி பற்றி கதைக்கல…. அது பற்றி கதைத்தால் நாள் போதாது.

குதிரை பந்தயத்தில் வெற்றி பெறுகிற தென்றால் அந்த ரகசியம் குதிரைக்குத் தான் தெரியும். சாட்டையின் முழு அடியின் வலியையும் தாங்கியிக்கும். அவ்வளவு தான். இலக்கிற்கு ஏற்ற மாதிரி தெரிவை சரியா செய்ய வேண்டும். “சொய்ஸ்” என்ற சொல் வாழ்க்கையில் முக்கியமானது. பல விஷயத்தை வாழ்க்கையில் தீர்மானிக்கிறது.

இப்பிடி கதைத்துக் கொண்டு போக தற்கொலை ஞாபகம் வருகிறது. இப்ப எதற்கெடுத்தாலும் உடனே தற்கொலை செய்கிறார்கள். இது சர்வசாதாரண விடயமாக மாறிவிட்டது. பரீட்சையில் பெயிலானால், காதல் தோல்வி, கடன் தொல்லை என்றால், வியாபாரத்தில் நஷ்டமானால் உடனே தற்கொலை செய்கிறார்கள்.

இப்படியே போனால் நினைத்தது நடக்கா விட்டால் கூட தற்கொலை செய்ய வேணுமெல்லோ..! இதற்குக் காரணம் நாம் தீர்மானித்த பாதையில் ஏதோ பிழை நிகழ்ந்து விட்டது அல்லது ஏதோ ஒரு விடயத்தில் கவனமில்லாமல் இருந்திட்டம் அவ்வளவு தான்.

இதை சரி செய்தால் நாளைக்கு நினைப்பது நடக்கும் நாமே ராஜா ஆகலாம். இலக்கு முடிவதில்லை ஒன்றை அடைய இன்னொன்று தானகவே முளைவிடும். தடுக்கவும் இயலாது முடக்கவும் இயலாது. காரணம் இலக்கு தான் ஒவ்வொரு நாள் வாழ்வையும் நகர்த்தப் போவது. இலக்கை அவன் அவன் தீர்மானித்து விட முடியாது. தேவையைப் போல நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும்.

தற்செயலாக இன்று இலக்கில்லாதவர்கள் உடனே ஏற்படுத்துங்கள். ஏனென்றால் நாளை என்பது உங்களுக்கு உரிமையற்றதாகி விடும்.
உரிமை இல்லாதவன் வாழ்ந்து என்ன பலன்…?