நாம் எல்லோரும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து ஓடி ஓடி நிம்மதியைத் தொலைக்கிறோம்.நம்மில் எத்தனை பேர் குடும்பத்துடன் வெளியில் கோயிலுக்கோ ஹேட்டலுக்கோ அற்லீஸ் பிக்னிக்கோ அடிக்கடி செல்கிறோம்.எத்தனை பேர் தினம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் அம்மா அல்லது அப்பாவிடம் பகிர்ந்து கொள்கிறோம்.அது வேண்டாம் எத்தனை கணவன்மார் மனைவியிடமாவது பகிர்ந்து கொள்கின்றனர் என்று கணக்கெடுத்தால் விடை 10ஐக் கூட தாண்டுமோ தெரியாது……..எத்தனை பேர் அடிக்கடி சிரிக்கிறோம்?
எல்லோரும் ஒரு மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதில் மட்டுமே வேறுபாடு இல்லை.அவர் அவர் சூழ்நிலைகளுக் கேற்றமாதிரி எல்லோருக்கும் ஒரு மன அழுத்தம்.முதல் மாத சம்பளம் வெறும்1000ரூபா.அதை அப்படியே அம்மாவிடமோ அப்பாவிடமோ கொடுத்து விட்டு தினமும் 10ரூபாய் வாங்கிக் கொண்டு அலுவலகம் சென்ற அனுபவம் பலருக்கும் இருக்கும்.அப்பொழுது இருந்த சந்தோஷம் இப்பொழுது கைநிறைய அதிகமாக சம்பளம் வாங்கும் போது இல்லையே ஏன்?அப்போது குடும்பத்துப் பொறுப்பு அப்பாவிடம் இருந்ததாலா?இல்லை.அப்படி இல்லை.அப்போது கவலையற்ற வாழ்வு.அப்போது எமக்காக மட்டுமே வாழ்ந்தோம்.இப்போது எல்லா உறவுக்காகவும் நாம் வாழ்கிறோம்.அதில் என்ன இருக்கிறது?எல்லோருமே அப்படித் தான் என்கிறீர்களா?ஆமாம்.ஆனால் நம்மில் எத்தனை பேர் இவ்வளவு சம்பாதித்தது போதும் என்று நினைக்கிறோம்?திரும்ப திரும்ப அந்த பணத்தை தானே நோக்கி ஓடுகிறோம்.அதனால்த்தானே நிம்மதியை சிரிப்பை சந்தோஷத்தை தொலைக்கிறோம்.எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வரட்டும் போகட்டும் அதற்காக சந்தோஷத்தை தொலைப்பானேன்.மன இறுக்கத்துடன் ஏன் வாழவேண்டும்.நாம் சந்தோஷப்படுவதை விட அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி அதில் சந்தோஷப்படுங்கள்.அதில் கிடைக்கும் சுகம் தனி.எக்ஸாம்பிள் ………..தினமும் ஒரு தடவையாவது அம்மாவின் சமையலைப் பாராட்டுங்கள்.பிறகு பாருங்கள் கவனிப்பு பலமாக இருக்கும்.ஓடி வரும் குழந்தையை அன்போடு தூக்கி கொஞ்சுங்கள்.அதை விட இன்பம் இல்லை இவ்வுலகில்.
ஒரு சம்பவம் சொல்கிறேன் படித்துப் பாருங்கள்.ஒருவர் புது கார் வாங்கி வீட்டிற்கு வந்தார்.காரைமுன் கூட்டிலே பாக்கிங் பண்ணிவிட்டு வீட்டின் உள்ளே செல்கிறார்.திறந்திருக்கும் ஜன்னல் வழியே பார்க்கிறார்.அவரது ஐந்து வயது மகன் அந்தக் காரில் ஏதோ கிறுக்குகிறான்.இவருக்கு வந்த கோபத்தில் புது கார் ஆச்சே…ஏதோ கிறுக்குகிறானே?என்று ஓடிச்சென்று கையில் கிடைத்ததை அவனுக்கு எறிந்தார்.
ஒரு சம்பவம் சொல்கிறேன் படித்துப் பாருங்கள்.ஒருவர் புது கார் வாங்கி வீட்டிற்கு வந்தார்.காரைமுன் கூட்டிலே பாக்கிங் பண்ணிவிட்டு வீட்டின் உள்ளே செல்கிறார்.திறந்திருக்கும் ஜன்னல் வழியே பார்க்கிறார்.அவரது ஐந்து வயது மகன் அந்தக் காரில் ஏதோ கிறுக்குகிறான்.இவருக்கு வந்த கோபத்தில் புது கார் ஆச்சே…ஏதோ கிறுக்குகிறானே?என்று ஓடிச்சென்று கையில் கிடைத்ததை அவனுக்கு எறிந்தார்.
அவன் குழந்தை என்பதை கோபம் மறைத்துவிட்டது.ஒரே இரத்தம் குழந்தையின் கையில்.அதைப்பார்த்து அவர் மனைவி ஓடி வந்து குழந்தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போனாள்.டொக்டர் பரிசோதித்து விட்டு ஒப்பரேசன் செய்ய வேண்டும் என்றார்.தாயும் சம்மதித்துவிட்டாள்.அடுத்த நாள் அவன் கண்முழித்து தகப்பனைப் பார்த்து சொன்னான் “சரிப்பா எனி மேல் அது மாதிரி கிறுக்கமாட்டேன்”என்று….தகப்பன் குனிந்து பார்த்து விட்டு அதிர்ந்து போனார்.அவனின் கைவிரல் எடுக்கப்பட்டிருந்தது.மனம் நொந்து கொண்டு வீடு போனவர் காரைப்பார்க்கப் போகிறார் அப்படி என்ன எழுதியிருக்கிறான் என்று . DADY I LOVE U VERY MUCH அதைப் படித்துவிட்டு அழுது புலம்புகிறார்.எழுதியதை அழித்துவிடலாம் ஏன் புது காரே வாங்கலாம்.குழந்தையின் விரல் வருமா?அந்த ஒரு நிமிடம் அவனை யோசிக்காமல் கோபப்பட வைத்தது எது?கார் பணம் தான்.வாழ்க்கையில் பணத்தைவிட புகழைவிட அந்தஸ்த்தைவிட சந்தோஷமாக அனுபவிக்க எவ்வளவோ உள்ளது.அதைப் பெற உலகத்தை ரசிக்க வேண்டும்.அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.தனி மனிதன் சந்தோஷப்பட்டால் உலகம் தானாகவே அமைதி பெறும்.
19 comments:
கதை(EX) சுப்பர் எங்கை சுட்டது...
உன்கைபோல ஆக்களை பக்கத்தில வைத்திருந்தால் எப்படி மனிசருக்கு சிரிப்பு வரும், முதல்ல கதை எழுதுற நாங்கள் அதன்படி இருக்கிறமோ எண்டு நினைக்கணும்...
///nikar said...
உன்கைபோல ஆக்களை பக்கத்தில வைத்திருந்தால் எப்படி மனிசருக்கு சிரிப்பு வரும், முதல்ல கதை எழுதுற நாங்கள் அதன்படி இருக்கிறமோ எண்டு நினைக்கணும்..///
சபாஷ் ! ஊருக்கொரு ஞாயம் உனக்கொரு ஞாயமா?
எல்லாம் கதைக்க நல்லாத்தான் இருக்கும், செய்து பாரும் புரியும்....
மனம் நொந்து கொண்டு வீடு போனவர் காரைப்பார்க்கப் போகிறார் அப்படி என்ன எழுதியிருக்கிறான் என்று . DADY I LOVE U VERY MUCH அதைப் படித்துவிட்டு அழுது புலம்புகிறார்.///
super...
///நம்மில் எத்தனை பேர் குடும்பத்துடன் வெளியில் கோயிலுக்கோ ஹேட்டலுக்கோ அற்லீஸ் பிக்னிக்கோ அடிக்கடி செல்கிறோம்.///
எங்கையப்பா எதுக்கெல்லாம் நேரம் இருக்கு,
பதிவு நன்றாக இருக்கிறது .ஒவ்வொரு வரிகளும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது .வாசித்தபிறகு தான் எங்கள் வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறன்.குட் .....
வழமையானத்தை விட பின்னுட்டங்கள் வேற ஏதோ சொல்வது போல கிடக்கு ....
கலக்குங்க...
நல்ல பதிவு.. ஆனா கதை பயங்கரமாக்கிடக்கு. விரல் கூசுது..
இப்பிடியான பிரச்சனைக்கெல்லாம் 90/10அப்ளை பண்ணினால் ஓகே எண்டு நினைக்கிறன்.. :)
VARO said...
கதை(EX) சுப்பர் எங்கை சுட்டது..//
எங்கையாவது இருந்தால் காட்டு, நான் பதிவேளுதுரத்தை நிப்பாட்டுறன்.
nikar said...
உன்கைபோல ஆக்களை பக்கத்தில வைத்திருந்தால் எப்படி மனிசருக்கு சிரிப்பு வரும், முதல்ல கதை எழுதுற நாங்கள் அதன்படி இருக்கிறமோ எண்டு நினைக்கணும்...///
கதையில இருந்து நீங்க என்ன எடுக்கிரியல் எண்ட வழியை பாருங்க. தெரிவிப்பது நான் தீர்மானிப்பது நீ...
kippoo said...
சபாஷ் ! ஊருக்கொரு ஞாயம் உனக்கொரு ஞாயமா?///
நீயுமா என்னை இப்பிடி சொல்லுறாய்? கவனிக்கிறான்...
Kondavil said...
எல்லாம் கதைக்க நல்லாத்தான் இருக்கும், செய்து பாரும் புரியும்..///
அதெல்லாம் ஒழுங்கா வரும் சோம்பேறி தனமா இருக்காமல் try பண்ணும்
colombo said...
எங்கையப்பா எதுக்கெல்லாம் நேரம் இருக்கு///
நேரத்தை நாம தான் உருவாக்கணும். வருகைக்கு நன்றி
aswamethan said...
பதிவு நன்றாக இருக்கிறது .ஒவ்வொரு வரிகளும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது .வாசித்தபிறகு தான் எங்கள் வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறன்.குட் ...//
aswamethan said...
வழமையானத்தை விட பின்னுட்டங்கள் வேற ஏதோ சொல்வது போல கிடக்கு ..///
அட பெரிசா ஒன்னுமில்லைங்க. யாரோ கிளறி விடுதுகள்.
அண்ணாமலையான் said...
கலக்குங்க..///
நன்றி
புல்லட் said...
நல்ல பதிவு.. ஆனா கதை பயங்கரமாக்கிடக்கு. விரல் கூசுது..
இப்பிடியான பிரச்சனைக்கெல்லாம் 90/10அப்ளை பண்ணினால் ஓகே எண்டு நினைக்கிறன்.. :)//
கதையில் பாதி உண்மையாக நடந்தது... வருகைக்கு நன்றி. உண்மையில் 90/10 க்கும் ஒற்றுமை உண்டு..
எனக்கு பதிவை விட கதை தான் பிடித்திருக்கு .நல்லதொரு விளக்கம் .கதை பதிவை சூப்பராக விளக்குது .
WELL done
VINMEENGAL said...
எனக்கு பதிவை விட கதை தான் பிடித்திருக்கு .நல்லதொரு விளக்கம் .கதை பதிவை சூப்பராக விளக்குது .
WELL done///
நன்றி.
Post a Comment