அஜித் மாட்டர் சூடாகப்பேசப்படுற நேரத்தில நானும் எதையாவது எழுதத் தானே வேணும்;. அஜித், ரஜினி விஷயத்தில் நடிகர்கள் தரப்பில் துள்ளிக்குதிப்பார் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர் நம்ம ‘மகாநடிகன்’ சத்தியராஜ் தான். காரணம் காவேரி பிரச்சினை உண்ணாவிரதத்தின் போது ரஜினியை அந்தக் காட்டுக் காட்டியிருந்தார். அரசியலுக்கு வர்ர ஐடியாவே இல்லாத இந்த மனுஷன் தன் தலைவர்களுக்காக வீணாக சகநடிகர்களை பகைத்துக் கொள்பவர். சிவாஜி படத்திற்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தபோது ‘ரஜினி பதிலுக்கு தன் படத்தில வில்லனா நடிக்கணும்’ எண்டு கேட்ட ஆள் இவர்.

கலைஞரின் தீவிர ஆதரவாளன், (நாத்திகவாதி என்பதால்) பெரியாரின் கொள்கை பரப்பாளர். அஜித் பேசியதற்கும் ரஜினி எழுந்து கைதட்டியதற்கும் மறுநாளே இவர் தரப்பிலிருந்து எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கொஞ்சம் தாமதமாக இப்போது ஆரம்பித்திருக்கின்றார்கள். கலைஞர் விடயத்தில் அஜித் பேசியது சரியே! இதை என்னைப்போல் பெரும்பகுதி ஆதரிக்கின்றது. கலைஞரின் குடும்ப, சுயநல, நாறல் அரசியலை முழு தமிழினமுமே காறித்துப்புகின்றது.

திரைமறைவில் இடம்பெறும் அஜித் - ரஜினிக்கு எதிரான சதியின் இன்னொரு கட்டம் இது….

பாசத்(பரதேசி) தலைவனுக்கான பாராட்டு விழாவில் உண்மையற்ற பேச்சுப் பேசி திரையுலக ஒற்றுமையைக் குலைத்ததற்கு அஜித் வருத்தம் கேட்பது, அஜித் பேச்சுக்கு கைதட்டியதன் மூலம் நடிகர்களின் ஒற்றுமையைக் குலைத்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூட இருக்கிறது.

பெப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடும் இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று, ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.

அதேபோல, ஜாகுவார் தங்கம் மீது கல்வீசித் தாக்கிய அஜித் (முடிவே பண்ணிட்டாங்க போல!) மற்றும் அவரது மேனேஜர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்படுமாம். இந்த விவகாரத்தில் நடிகர் சங்க உறுப்பினரான ஜாகுவார் தங்கம் புகார் கொடுத்திருப்பதால், இந்த விவகாரத்தை சாதாரணமாக விட்டுவிட முடியாது என நடிகர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
நேற்றே அஜித் வருத்தம் தெரிவிப்பார் என்று நடிகர் சங்கம் எதிர்பார்த்ததாம். ஒரு பேப்பரில் வருந்துகிறேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வேலையைப் பாருங்கள்... இதெல்லாம் சகஜம் என்று சங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவர் அஜீத்திடம் சமரசமாக சொல்லிப் பார்த்தாராம்.

ஆனால் அஜித்திடமிருந்து அப்படி எந்த அறிக்கையும் வரவில்லை. எனவேதான் அடுத்த அஸ்திரமாக நடிகர் சங்க செயற்குழுவைக் கூட்டி, குழு உறுப்பினர்கள் சத்யராஜ், முரளி, எஸ்.வி.சேகர், சூர்யா, மயில்சாமி, சின்னி ஜெயந்த், மும்தாஜ், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, குயிலி, நம்பிராஜன், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்க, சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையில் புதிய முடிவு எடுப்பார்களாம்.

என்னதான் நடந்தாலும் அஜித் மாறக்கூடாது. சாக்கடை அரசியல் செய்பவர்கள், தங்கள் பினாமிகள் மூலம் சாக்கடையை சினிமாவிலும் கொட்டுகிறார்கள். என்ன என்னத்துக்கோ எல்லாம் கூடும் திரையுலகம் உங்கள் ஒற்றுமையைக் காட்ட இதில் கூடுங்கள் பார்க்கலாம்.