எல்லா நாடுகளும் எதிர்நோக்கும் பிரச்சினையாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினை தான். சில நாடுகள் வறுமையிலும் சிக்கித் தவிக்கின்றன.
சர்வதேச பொருளாதார நெருக்கடி வறுமை ஒழிப்பில் ஆசிய நாடுகள் அண்மைக்காலமாக கண்டு வந்த முன்னேற்றங்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் பிராந்தியத்தில் மேலும் 2 கோடியே 10 இலட்சம் மக்களை வறுமைக்குள் தள்ளியிருக்கிறது என்ற அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டதாகும்.
“உலகளாவிய நிச்சயமற்ற நிலை யுகத்தில் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைதல்” என்ற தலைப்பிலான அறிக்கை சர்வதேச பொருளாதார மந்த நிலை ஆசிய பிராந்திய நாடுகளில் வாத்தகத்தை தளர்வடையச் செய்திருக்கின்றது. ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை மூலமான வருமானங்களைக் குறைத்திருப்பதுடன் வேலையில்லாத் திண்டாட்ட மட்டங்களையும் கடுமையாக அதிகரித்திருக்கின்றது.
உலகில் கடுமையான வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைப்பது தொடக்கம் எச்.ஐ.வி பரவலைத் தடுத்தல் மற்றும் சகலருக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவது வரை பல இலக்குகளை 2015 ஆம் ஆண்டளவில் எட்டுவதே இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐ.நாவினால் வகுக்கப்பட்ட மிலேனியம் அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும்.
ஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலையின் தாக்கங்கள் முதலில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் ஏற்படுகின்ற கடுமையான அதிகரிப்பினால் உணரக் கூடியதாக இருக்கின்றது. ஆசிய பசுபிக் பொருளாதாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. இதன் விளைவாக வேலைவாய்ப்புக்களும் தொழில் உருவாக்கங்களும் குறைவடையப் போவதுடன் அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான குறைப்புக்களை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. வறுமை அதிகரிப்பதுடன் சுகாதாரம் மற்றும் கல்வியின் தரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டு மிலேனியம் அபிவிருத்தி இலக்கு பின்னடைவை எதிர் நோக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
பொதுப்படையாக ஆசிய மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் சில நாடுகளில் அந்த முன்னேற்றம் மெதுவானதாகவே இருக்கின்றது. இந்தப் பிராந்தியம் உலகின் வறியவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்களையும் கொண்டதாக இருக்கின்றது.
இந்தியாவில் மாத்திரம் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். 1990-2005 கால கட்டத்தில் 150 கோடியில் இருந்து 97 கோடி 90 இலட்சமாகக் குறைத்துள்ளது. வறுமை மட்டத்தை 60 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைத்து சீனா அபாரமான முன்னேற்றத்தை காட்டியது.
ஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாகப் பெருமளவில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டதன் விளைவாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் “புதிய வறியவர்கள்” உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆசியாவில் வேலையில்லாமல் தவிப்பவர்கள் 2009ஆம் ஆண்டு 9 கோடி 80 இலட்சம் வரை அதிகரித்திருக்கின்றது.தொடர்ச்சியான வேலை இழப்பு போதிய சமூகப் பாதுகாப்பின்மையை மேலும் கூடுதல் எண்ணிக்கையான மக்களை வறுமையில் தள்ளிவிடக் கூடிய ஆபத்தான சூழ்நிலையை ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் எதிர்நோக்குகின்றன.
15 comments:
எல்லோருடைய கவனமும் தற்போது பொருளாதாரத்தின் பக்கம் தான் திரும்பியுள்ளது .காரணம் அந்த அளவுக்கு அதன் தாக்கம் மாறியுள்ளது .தொழில் நுட்ப வளர்ச்சி தான் இதற்கு காரணம் என்றுகூட சொல்லலாம் . U.N அறிக்கைகூட பொருளாதரத்தில் மீள முடியாது என்றுதான் சொல்கிறது .இதுபற்றி அவரவர் நாடுகள் தான் கவனம் செலுத்த வேண்டும் .இல்லாவிட்டால் எதிர்காலம் அம்போ தான் ....
ஃஃஎல்லோருடைய கவனமும் தற்போது பொருளாதாரத்தின் பக்கம் தான் திரும்பியுள்ளது .காரணம் அந்த அளவுக்கு அதன் தாக்கம் மாறியுள்ளது .தொழில் நுட்ப வளர்ச்சி தான் இதற்கு காரணம் என்றுகூட சொல்லலாம் . U.N அறிக்கைகூட பொருளாதரத்தில் மீள முடியாது என்றுதான் சொல்கிறது .இதுபற்றி அவரவர் நாடுகள் தான் கவனம் செலுத்த வேண்டும் .இல்லாவிட்டால் எதிர்காலம் அம்போ தான் ....ஃஃ
நிச்சயமாக.... அருமையான தகவல்... நன்றி...
///aswamethan said... இதுபற்றி அவரவர் நாடுகள் தான் கவனம் செலுத்த வேண்டும் .///
இப்படி சொல்ல முடியாது .ஏனென்றால் மூன்று வகையாக பொருளாதரத்தில் நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளது .ஆகவே வறுமையான நாடு தானாக முன்னேற முடியாது .இதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள்தான் உதவ வேண்டும் .
///VINMEENGAL said... வறுமையான நாடு தானாக முன்னேற முடியாது .இதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள்தான் உதவ வேண்டும்.///
இன்றைய காலகட்டத்தில் அப்படி சொல்ல முடியாது .ஒவ்வொரு நாடும் தான் தான் முன்னிலையில் நிக்கவேண்டும் என்று படாதபாடு படுகிறது .வளர்ச்சியடைந்த நாடுகள் கூட தங்களை மேலும் முனேற்ற பார்க்குதே தவிர ஏழை நாடுகளை கவனிப்பதில்லை .அதுதான் இன்றைய நிலைமை அனைவருக்கும் .
///aswamethan said... ஒவ்வொரு நாடும் தான் தான் முன்னிலையில் நிக்கவேண்டும் என்று படாதபாடு படுகிறது .வளர்ச்சியடைந்த நாடுகள் கூட தங்களை மேலும் முனேற்ற பார்க்குதே தவிர ஏழை நாடுகளை கவனிப்பதில்லை .அதுதான் இன்றைய நிலைமை அனைவருக்கும் .///
இல்லவே இல்லை .united nations,other well fare org போன்ற அமைப்புக்கள் ஏன் இருக்கிறது ?அதில் எந்த நாடுகள் பங்களிப்பு செய்கின்றன ?தெரியாத ?சும்மா கதைக்க கூடாது .
நான் உங்களோடு கருத்து பகிரவே வந்தேன் .வேற ஒண்டு இல்லை .பணக்கார நாடுகள் எதில தான் பங்களிப்பு செய்தலும் அவயளுக்கு ஒருதக்கம் வரும்போது சிலவேளை அவயலாலா கூட சமாளிக்க முடியாமல் போவதுண்டு .நல்ல உதாரணம் அண்மையில் நடந்த சம்பவம் அமெரிக்க வரிதினைக்களம் தாக்கப்பட்ட்டது .அதற்கு ஈடு கொடுக்க ஏதோ ஒன்றின் செலவை குறைத்தே ஆகவேண்டும் .தங்கட நாட்டுக்குள்ளேயே இப்படி என்றால் பிறருக்கு உதவுவது சத்தியமா ?
அடுத்த ஒரு செய்தி தற்போது தங்கம் விலை ஏறிக்கொண்டு போகுது .நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு அதில முதலிடு செய்யுது .மற்ற நாட்டை திரும்பி பார்க்க நேரம் கூட இருக்காது .
எத்தனையோ நாடுகள் பின்தங்கிய நிலையில் இருந்து இப்ப எங்கேயோ போய்ட்டுது .உதவி இல்லாவிட்டால் இன்றும் அதேநிலை தான் .
உதாரணம் சீனாவை ஜப்பானை எடுப்பம் .முற்றாக அழிந்துபோய் இருந்தது .வரலாறை வாசிக்கும் போது மீளுமா என்று கூட தோன்றியது ?அது இப்ப என்கிநேக்க நிக்குது ...என்ன சும்மாவா ?
போதும் பொத்து.. எங்கட நாடு நல்ல உதாரணம் .1990 யும் 2010 யும் யோசித்தால் தெரியும் உண்மை BMICH யார் தந்தது ?ஜப்பான் இல்லாட்டி இண்டை வரைக்கும் எந்த அரசியல் வாதியாலும் இப்படி ஒன்றைக்கட்ட முட்டியது ...இப்ப தெரியுதா பவர் .............ஹி
இண்டைய அரசியல் பிரச்சினையைப்பார்த்தால் யாரும் வரமாட்டன் .அப்பிடி போகுது தெரியாதா ?ஓ....... ஓ .......ஓ .......எண்டு கத்தினாலும் யாரும் வரமாட்டன் .
என்னப்பா கொஞ்சம் அசந்தா இப்படியா பின்னூட்டம் போடுறது, எல்லாத்துக்கும் உடன கமெண்ட் பண்ணுற நான் இதுக்கு பண்ணல. இது பொருளாதார விஷயம் எனக்கு இண்டரெஸ்ட் இல்லை. அஜித் விஜய் காக சண்டை பிடிக்கிறவங்க மத்தியில VINMEENGAL vs aswamethan அறிவியல் ரீதியா உருப்படியா இதில் சண்டை போகுது ... நல்லது அனால் நீங்க ரெண்டு பெரும் யார் எண்டு எனக்கு தெரியல. கேட்டும் சொல்லுறீங்கள் இல்லை. பரவாயில்லை பின்னூட்டங்களால் எண்கள் பதிவுகளை அலங்கரிக்கிறீர்கள்
என்ன ரொஷா! பதிவில இப்பிடி சண்டை போகுது.. ஒருத்தரும் எதிர் பார்க்காத சண்டை. எதற்கென்று நினைத்து தலை வெடிக்குது
// VARO said... என்னப்பா கொஞ்சம் அசந்தா இப்படியா பின்னூட்டம் போடுறது, எல்லாத்துக்கும் உடன கமெண்ட் பண்ணுற நான் இதுக்கு பண்ணல. இது பொருளாதார விஷயம் எனக்கு இண்டரெஸ்ட் இல்லை. அஜித் விஜய் காக சண்டை பிடிக்கிறவங்க மத்தியில VINMEENGAL vs aswamethan அறிவியல் ரீதியா உருப்படியா இதில் சண்டை போகுது ... நல்லது அனால் நீங்க ரெண்டு பெரும் யார் எண்டு எனக்கு தெரியல. கேட்டும் சொல்லுறீங்கள் இல்லை. பரவாயில்லை பின்னூட்டங்களால் எண்கள் பதிவுகளை அலங்கரிக்கிறீர்கள்//
விரும்பினால் நீரும் வந்து பாரும் .தெரிந்ததைப்பற்றி கதைக்காம என்ன சும்மா விட்டுடுவோமா ?விஜய் என்றால் நீர் கலக்கியிருப்பீர் .அது எல்லாருக்கும் தெரியாத ?
///////// kippoo said... என்ன ரொஷா! பதிவில இப்பிடி சண்டை போகுது.. ஒருத்தரும் எதிர் பார்க்காத சண்டை. எதற்கென்று நினைத்து தலை வெடிக்குது////////
சண்டை ஒண்டும் போகல ......சும்மா பகிர்வுதான் ....வந்து நீங்களும் பின்னுட்டம் போடுங்கள் .தேவையில்லாம சண்டை எண்டு கதையை மாத்திடாதங்கோ ...ஏலே புரியுதா ஏலே
VINMEENGAL said...
சண்டை ஒண்டும் போகல ......சும்மா பகிர்வுதான் ....வந்து நீங்களும் பின்னுட்டம் போடுங்கள் .தேவையில்லாம சண்டை எண்டு கதையை மாத்திடாதங்கோ ...ஏலே புரியுதா ஏலே///
oom vaaran... oru kummi poduvamaaa?
Post a Comment