முன்தின காலம் இப்ப மலையேறிப்போச்சு இண்டைக்கு காலையில றேடியோ கேட்ட போது தான் நினைச்சன்.


என்னென்று பார்க்கிறீங்களா? பெரிய விசயமா இல்ல ஆனால் இன்றைய கால கட்டத்தில உண்மையாக பாரதூரமான விஷயமாகத் தான் மாறி வருகிறது.
நாங்கள் முதலாம் ஆண்டு படிச்சது என்றது பெரிய விஷயமில்லை. 6 வயது வந்த உடனே பக்கத்தில உள்ள பள்ளிக் கூடத்தில கொண்டு போய் சேர்த்து விடுவினம். பிறகென்ன எங்கட விளையாட்டுத் தான்.

ஆனா இண்டைக்கு முந்தின மாதிரி லேசுப்பட்ட காரியமில்லை.
ஆண்டு ஒண்டுக்கு பிள்ளையை பள்ளிக் கூடம் சேர்ப்பது. பள்ளிக் கூடம் சேர்ப்பது என்றால் கேள்விக்கு மேல கேள்வி கேட்டுக் கொல்றாங்கள். அதைவிட உள்ளாலே சம்திங் கேட்கிறாங்கள். பள்ளிக் கூடத்துக்கு அது செய்யுங்கோ இது செய்யுங்கோ எண்டு அரிச்சு எடுக்கிறாங்கள்.


றேடியேவில ஒரு செய்தி கேட்டன் “உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக் கடிதத்துடன் தரம் ஒன்றுக்கு மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.;”


கேட்டவுடன் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னடாப்பா இதுக்கெல்லாமா கோட்டுக்குப் போறாங்கள். காணிப் பிரச்சினை, டிவோஸ் எண்டாத்தான் கோட்டு வாசல் ஏறுவோம். இப்ப உண்மையில காலம் மாறித்தான் போச்சு. ஏன் இந்த நிலை உருவானதென்றால்….நாங்கள் தான் உருவாக்கியிருக்கிறோம்.
இருக்கிறவன் அள்ளி எறிகிறான். இல்லாதவன் பள்ளிக் கூடத்தில இருந்து தூக்கி எறியப்படுகிறான். சந்தர்ப்பத்துக்கு அஜித்தின் பாட்டு ஞாபகம் வருது….


“கலைமகள் தனது பிள்ளையைச் சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்.”


நடைமுறைக்குப் பொருத்தமானது தான். உண்மையில் சரஸ்வதி ப+மிக்கு வந்தால் இது தான் நடக்கும். நான் அறிந்தவரை எத்தனையோ பிள்ளைகள் இது வரை பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில இருக்குதுகள்.
இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தி; எந்தப் பிரயோசனமும் இல்லை. கல்வி கானல் நீராகத்தான் போகிறது. இலங்கையில தரமானது அது ஒண்டு தான் இப்ப அதுவும் இல்லாமல் போகுது. எதிர்காலம் கேள்விக் குறி தான். எத்தனையோ சட்டங்களைக் கொண்டுவாறாங்கள்.இதைப்பற்றி யாரும் கவனிக்கிறாங்கள் இல்லையே..



பிள்ளையைப் பள்ளிக் கூடம் சேர்க்கப் போய் அதிபருக்கு கார் வாங்கிக் கொடுத்த கதையும் இருக்கு.(பள்ளிக் கூடத்தைக் குறிப்பிட விரும்பவில்லை.) ஆண்டு ஒன்றுக்கே இந்த நிலை என்றால்…. வேற அலுவல் செய்யுறது லேசுப்பட்ட காரியமா?



அரசியலும் ஊழலும் புகுந்திராத இடமாக இருந்த ஒன்று பள்ளிக்கூடங்கள் தான் இப்ப அதுவும் போச்சு……